Posts

Showing posts from February, 2020

அதிமேதகு கெளரவ ஐனாதிபதிக்கு பல்கலைக்கழக மாணவர்களின் கண்ணீர் மடல்

Image
அதிமேதகு கெளரவ ஐனாதிபதிக்கு பல்கலைக்கழக மாணவர்களின் கண்ணீர் மடல் பல்கலைக்கழக வாழ்க்கைக்கு வந்த நாளில் பல கனவுகள் பல எதிர்பார்ப்புகள் கண்ணால் பல்கலைக்கழகத்தை பார்த்தும் அப்படி ஒரு பூரிப்பு.பல்கலைகழகம் தொடங்கிய முதல் நாள் இரவு எங்களுடைய முதல் விடுமுறையாக அமைந்தது. ஒரு மாதம் கழித்து மீண்டும் பல்கலைக்கழகம் வந்தோம் பரீட்சயமில்லா நபர்கள் வாயில் வைக்க முடியாத உனவுகள்.மறு நாளில் இருந்து விரிவுரை காலம் ஓடியது மீண்டும் 6 மாத செமஸ்டரில் டெங்கு விடுமுறை என ஒரு மாத காலம் சென்றது.இப்படி பல்கலைக்கழக வாழ்க்கை ஓட இடை இடையே சீனியர்கள் தொல்லை . பரீட்சையமில்லாத பல்கலைக்கழக வாழ்க்கை என்பதால் எந்த எந்த வேலையை யாரிடம் போய் செய்வது என்று முழித்து கொன்டிருந்து வேலைகளை முடித்த தருணம் இன்னும் நினைவில் உள்ளது. பொதுவான வேலையாக பல்கலைக்கழக காரியாலயம் சென்றால் அங்கு கல்வி சாரா ஊழியர்கள் பெரிய பதவியில் இருப்போர் போல எம்மை அதட்டிய தருணங்கள் இன்றும் எம் நினைவுக்கு வருகிறது. மாணவர்கள் நலன் பேனப்படுகின்றது என பார்தால் ஊழியர்களின் நலனே பாதுகாக்கபட்டு வருகின்றன. கல்வி சாரா ஊழியர்களின் முறைப்பும் எங்களை கேவலம