அதிமேதகு கெளரவ ஐனாதிபதிக்கு பல்கலைக்கழக மாணவர்களின் கண்ணீர் மடல்

அதிமேதகு கெளரவ ஐனாதிபதிக்கு பல்கலைக்கழக மாணவர்களின் கண்ணீர் மடல்



பல்கலைக்கழக வாழ்க்கைக்கு வந்த நாளில் பல கனவுகள் பல எதிர்பார்ப்புகள் கண்ணால் பல்கலைக்கழகத்தை பார்த்தும் அப்படி ஒரு பூரிப்பு.பல்கலைகழகம் தொடங்கிய முதல் நாள் இரவு எங்களுடைய முதல் விடுமுறையாக அமைந்தது. ஒரு மாதம் கழித்து மீண்டும் பல்கலைக்கழகம் வந்தோம் பரீட்சயமில்லா நபர்கள் வாயில் வைக்க முடியாத உனவுகள்.மறு நாளில் இருந்து விரிவுரை காலம் ஓடியது மீண்டும் 6 மாத செமஸ்டரில் டெங்கு விடுமுறை என ஒரு மாத காலம் சென்றது.இப்படி பல்கலைக்கழக வாழ்க்கை ஓட இடை இடையே சீனியர்கள் தொல்லை . பரீட்சையமில்லாத பல்கலைக்கழக வாழ்க்கை என்பதால் எந்த எந்த வேலையை யாரிடம் போய் செய்வது என்று முழித்து கொன்டிருந்து வேலைகளை முடித்த தருணம் இன்னும் நினைவில் உள்ளது. பொதுவான வேலையாக பல்கலைக்கழக காரியாலயம் சென்றால் அங்கு கல்வி சாரா ஊழியர்கள் பெரிய பதவியில் இருப்போர் போல எம்மை அதட்டிய தருணங்கள் இன்றும் எம் நினைவுக்கு வருகிறது. மாணவர்கள் நலன் பேனப்படுகின்றது என பார்தால் ஊழியர்களின் நலனே பாதுகாக்கபட்டு வருகின்றன.

கல்வி சாரா ஊழியர்களின் முறைப்பும் எங்களை கேவலமான முறையில் பார்ப்பதும் இன்று நடந்து வரும் விடயங்கள் ஆகும். விரிவுரைகளுக்கு சென்றால் சில விரிவுரையாளர்களின் காராசார பேச்சும் அவர்களை மீறி பேசும் போது பரீட்சையில் சித்தி பெற விடாமல் செய்வதும் இன்றைய பல்கலைக்கழக சூழலில் நடக்கும் விடயங்களே. முதல் செமஸ்டர் எட்டு மாதங்களாக முடிவடைய .அடுத்த செமஸ்டர் ஆரம்பதோடு ஒரு விடுமுறையும் இடையில் கல்வி சாரா ஊழியர்களின் பனிப்பகிஷ்கரிப்பும் சுமார் மூன்று மாதங்கள் செல்ல முதலாம் ஆண்டு நிறைவடைய சுமார் ஒன்றரை வருடங்கள் சென்றது. மீண்டும் இரண்டாம் வருட மாணவர்களாக பல்கலைக்கழகத்துக்கு வருவதற்கு மூன்று மாதங்கள் விடுமுறை கேட்டால் speacial, genrel மாணவர்கள் தெரிவாம். மீண்டும் பல்கலைக்கழகம் வந்தோம் இரண்டாம் வருட முதல் செமஸ்டர் முடியும் முன் நாட்டில் பயங்கரவாத குழப்பம் காரணமாக இரண்டு மாதங்கள் விடுமுறை இதேபோல் இரண்டாம் வருட இரண்டாம் செமஸ்டரில் கல்வி சாரா ஊழியர்களின் பனிப்பகிஷ்கரிப்பு காரணமாக ஒன்றரை மாத விடுமுறை இடை இடையே மாணவர்கள் தங்கள் உரிமையைக் கோரி ஆர்ப்பாட்டம்.

 இவை அனைத்தும் கடைசியில் ஒரு செமஸ்டர் ஆறு மாதங்கள் என்பதை ஒன்றரை வருடங்களாக மாற்றியது . இரண்டு செமஸ்டர் முடிய சுமார் மூன்று வருடங்கள் முடிவடைந்துள்ளது. விடுமுறை கொடுமை மட்டுமன்றி காலை 7.30 மனியிலிருந்து மாலை 6.30 வரை‌ விரிவுரைகள் . அதுவும் போதாதது போல் சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை போன்ற நாட்களில் விரிவுரைகள். இவ் அணைத்தையும் தான்டியும் ஒவ்வொரு மாணவர்களின் குடும்ப கஷ்டம் . அரசாங்கத்தினால் உதவி நிதிகள் கிடைத்தாலும் பல்கலைக்கழக கால நீட்சி காரணமாக செலவு அதிகரிப்பு. இன்னும் ஒவ்வொரு வருடமும் வெள்ள விடுமுறை .இப்படியே சென்றால் ஒரு genrel டிகிரியை முடிக்க நான்கரை வருடம் கழிகிறது.பல்கலைகழக நுழைவு 21 வயதில் வந்தால் வெளியே செல்வது 25 வயதில். 25 வயதில் வெளிச் சென்றால் மாத்திரம் பட்டம் கிடைக்குமா இல்லை convercation நடப்பது ஒரு வருடங்கள் கழித்து எனவே பல்கலைக்கழகம் சென்றால் முழுமையான ஒரு பட்டத்தை பெற ஆறு வருடங்கள் செல்கிறது. வெளியில் வந்தால் வேலைவாய்ப்பு பிரச்சினை .slas அல்லது sles இது போன்ற பரீட்சை செய்வதென்றாலும் ஒருமுறை மட்டுமே பங்கேற்கும் வாய்ப்பு ஏனென்றால் வயது சென்று விட்டது. முழுமையாக கல்விக்காக வாழ்கையில் 26 வருடங்கள் கழித்தும் பட்டம் பெற்றோரின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாக உள்ளது. இதே ஒரு மாணவன் உயர் தர பரீட்சையில் சித்தியடையாமல் வெளிவாரியாக பட்டம் பெற்று எங்களுக்கு முன்‌ அரசாங்க வேலைகளில் அவர்கள். பல்கலைக்கழக தெரிவில் தகுதியின்றி college செல்பவர்களுக்கும் பட்டம் பெற்றவுடன் வேலைவாய்ப்பு .ஏன்‌ பல்கலைக்கழக பட்டம் பெற இவ்வளவு கஷ்டம்.பெற்றுவிட்டால் மாத்திரம் வேலைவாய்ப்பு பெற படாதபாடு. எனவே அதிமேதகு ஜனாதிபதி அவர்களே எங்கள் குறைகள் சமூக வலைத்தளமூடாக உங்களிடம் ஒப்படைக்கிறோம்.இதற்கான முடிவை எதிர்பார்து எம் இம் மடலை முடிக்கிறோம்.
 

நன்றி

Comments

Popular posts from this blog

பாடசாலை வழிகாட்டல் ஆலோசனை சேவை தொடர்பான தொகுப்பு(மட்டக்களப்பு முதலைக்குடா மத்திய மகா வித்தியாலயம்

போட்டி பரீட்சை நுண்ணறிவு வினாக்கள்