பொது அறிவு வினாக்கள்
பொது அறிவு வினாக்கள் - 2025
1. 2025 ஆம் ஆண்டில் வரலாற்றின் முதல் அமெரிக்க போப்பாண்டவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
2. முதன்முறையாக U-22 உலக இளையோர் வலைப்பந்தாட்டப் போட்டியை நடத்திய ஆசிய நாடு எது?
3. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான சர்வதேச தைரியமான பெண்கள் விருதை வென்ற இலங்கை பத்திரிக்கையாளர் யார்?
4. 2024 ஆம் ஆண்டுக்கான "Wanderlust Reader Travel Award" விருது வழங்கும் விழாவில், தனித்துப் பயணிக்கும் பெண்களால் மிகவும் விரும்பப்படும் நகரமாக முதலிடம் பிடித்தது எது?
5. 2030 ஆம் ஆண்டுக்குள், ஆன்லைன் தளங்கள் தங்கள் உள்ளடக்கத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளுக்கு VAT வசூலிக்க வேண்டும் என்ற புதிய சட்டத்தினை அறிமுகப்படுத்திய சர்வதேச அமைப்பு எது?
6. 2027 ஆம் ஆண்டுக்கான FIFA மகளிர் உலகக் கிண்ணப் போட்டியை நடத்தவுள்ள நாடு எது?
7. இலங்கை பாராளுமன்றம் பற்றிய “Memories of 33 years in parliament” என்ற நூலின் ஆசிரியர் யார்?
8. சமீபத்தில் (2025) புலிட்சர் பரிசு வென்ற 'ஜேம்ஸ்' என்ற நாவலின் ஆசிரியர் யார்?
9. 2025 ஆம் ஆண்டிற்கான உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) உலகளாவிய சுகாதாரத் தலைவர்கள் மாநாடு எங்கு நடைபெறவுள்ளது?
10. 2024 ஒலிம்பிக் போட்டியில் அதிக பதக்கங்களை வென்ற நாடு எது?
11. இலங்கையின் இரண்டாவது பெண் பிரதம நீதியரசராக (Chief Justice) நியமிக்கப்பட்டவர் யார்?
12. நியாயமான வரிமுறைகள் பற்றி கூறும் “The Wealth of Nations” என்னும் நூலினை எழுதியவர் யார்?
13. 2034 FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்தவுள்ள நாடு எது?
14. CGT என்பதன் விரிவாக்கம் யாது?
15. அண்மையில் வெளியிடப்பட்ட (2025) ஐக்கிய நாடுகள் சபையின் மனித அபிவிருத்தி சுட்டியில் முதல் இடத்தில் உள்ள நாடு எது?
16. எந்த நாட்டுத் தேர்தல் ஆணையம், 2024ல் நடந்த தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததாகக் கூறி தேர்தல் முடிவுகளை இரத்து செய்தது?
17. இலங்கை முதன்முதலில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வருடம் எது?
18. சுதந்திர இலங்கையின் முதலாவது பெண் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர்?
19. இலங்கையின் மிகப்பெரிய அந்நிய செலாவணி ஈட்டும் துறை எது?
20. இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சிக்கு உதவும் பிரதான சர்வதேச வங்கி எது?
21. உலக வங்கியின் தற்போதைய (2025) தலைவரான அஜய் பங்கா எந்த நாட்டினைச் சேர்ந்தவர்?
22. ஜப்பானிய பாடசாலை பாடப்புத்தகங்களில் “ஹிரோ” என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ள இலங்கை ஒலிம்பிக் வீரர் யார்?
23. 24வது பிம்ஸ்டெக் (BIMSTEC) உச்சி மாநாடு 2025 எங்கு நடைபெறவுள்ளது?
24. உலக சுகாதார நிறுவனத்தால் சமீபத்தில் மலேரியா அற்ற நாடாக அறிவிக்கப்பட்ட நாடுகள் எவை?
25. "போருக்குப் பிந்தைய அரசியலமைப்பு" (Post-war constitution) என அழைக்கப்படும் அரசியலமைப்பைக் கொண்ட ஆசிய நாடு எது?
26. பிரிட்டனின் தற்போதைய (2025) துணைப் பிரதமர் பெயர் என்ன?
27. மெக்சிக்கோவின் தற்போதைய (2025) பெண் ஜனாதிபதியின் பெயர் என்ன?
28. இரண்டு ஆண்டுகளில் இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களை நடத்திய ஐரோப்பிய நாடு எது?
29. ஆசியான் கூட்டமைப்பின் முதலீட்டாளர்கள் மாநாடு 2025 எங்கு நடைபெறவுள்ளது?
30. எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பின் (RSF) உலக ஊடக சுதந்திரச் சுட்டெண்ணில் 2025 இல் முதலிடத்தில் உள்ள நாடு எது?
31. 2025 ஆம் ஆண்டில் 15 மணி நேர தொடர் செய்தியாளர் சந்திப்பை நடத்தி உலக சாதனை படைத்த தெற்காசிய நாட்டுத் தலைவர் யார்?
32. 2025 ஆம் ஆண்டுக்கான
Comments