பாடசாலை வழிகாட்டல் ஆலோசனை சேவை தொடர்பான தொகுப்பு(மட்டக்களப்பு முதலைக்குடா மத்திய மகா வித்தியாலயம்

(பாடசாலை வழிகாட்டல் ஆலோசனை சேவை அதிபர் ஆசிரியர்கள் மற்றும் ஆலோசகர்களின் செயற்பாடுகள்


வழிகாட்டல் ஆலோசனை சேவையுள்ள ஒரு பாடசாலையை தெரிவு செய்து அதன் செயற்பாடுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள விதத்தில் காரணமாக காணப்படுகின்ற அனுகூலங்கள்  செயற்பாடுகளின் திருப்தி தொடரப்பில் மற்றும் பாடசாலையின் ஆலோசனை சேவையை வெற்றியடையச் செய்வதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் போன்றவற்றை ஆராய்கிறது. கல்வித் துறையில் ஆலோசனை வழிகாட்டல் என்பது உலகளாவிய ரீதியில் சமகாலப் பாடசாலைகளில் மிகவும் இன்றியமையாத சேவையாக காணப்படுகின்றது. இவை வழிகாட்டல், ஆலோசனை எனும் இரண்டு எண்ணக்கருக்கள் அதில் முக்கிமானவையாகும் இவை ஒன்றுபோல் தோன்றினாலும் வெவ்வேறான கருத்துக்களையே தருகின்றன.வழிகாட்டல் எல்லாப் பகுதியினருகுக்கும் எல்லாச் சந்தர்பபங்களிலும் வழங்கப்படும் ஒரு உதவிச் சேவையாகும். ஆலோசனை என்பது பிரச்சினைக்குட்பட்ட ஒரு நபருக்கு அவரிடம் மறைந்திருக்கும் திறன்களை வெளிக்கொணர;வதன் மூலம் அவராகவே பிரச்சினைக்குரிய தீர;வினை எடுப்பதற்கு உதவுகின்றதொரு செயற்பாடாகக் கூறலாம்.




இதனை உணர்ந்து இன்று பாடசாலை அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் வழிகாட்டல் ஆலோசனை சேவை முக்கியப்படுத்தப்பட்டுள்ளது. பாடசாலைகளில் வழிகாட்டல் சேவையானது 1950 ஆண்டுகளில் முன்மொழியப்பட்ட போதிலும் 2004 ஆம் ஆண்டு உயிரைக்காவு கொண்டு நாட்டினை பேரழிவுக்கு உட்படுத்திய சுனாமிக்குப் பின்னர் ஆலோசனை என்ற சொல் மக்கள் மத்தியில் பிரபல்யமாகப் பேசப்பட்டதோடு, பாடசாலை சமூகத்திற்கும் கட்டாய தேவையுடையதாக காணப்பட்டது. பாடசாலை வழிகாட்டல் ஆலோசனைச் சேவையானது சில கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. அக்கோட்பாடுகள் உளவியல், கல்வியல், சமூகவியல், அறநெறி ஆகியவற்றைச் சாரந்தனவாக பாடசாலையில் முன்னெடுக்கப்படுகின்றன.




அந்த வகையில் கல்வியியல் பாட விரிவுரையாளரினால் வழங்கப்பட்ட “ வழிகாட்டல் ஆலோசனை சேவை உள்ள ஒரு பாடசாலையை இனங்கண்டு அப் பாடசாலையின் வழிகாட்டல் ஆலோசனை சேவையின் செயற்பாடுகள், அச் சேவை ஒழுங்கமைக்கப்பட்டுள்ள விதம் காரணமாக கிடைக்கும் அநுகூலங்கள் மற்றும் அச் சேவையின் செயற்பாடுளின் திருப்தி” என்பன தொடர;பான கள ஆய்வானது எமது குழுவினால் கடந்த 26.02.2020, 28.02.2020 ஆகிய இரு தினங்களில் காலை 8.45 தொடக்கம் 10.15 வரை மட்டக்களப்பு, மண்முனை மேற்கு வலயத்தில் மட்/மமே/ முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் அங்குள்ள பாடசாலை வழிகாட்டல் ஆலோசகர் திரு.குழந்தைவேல் கருணைலிங்கம் ஆசிரியருடன் கலந்துரையாடலை மேற்கொண்டதன் மூலம் பாடசாலையின் வழிகாட்டல் ஆலோசனை சேவையின் செயற்பாடுகள், அச் செயற்பாடுகள் மூலம் அவர்கள் அடையும் அநுகூலங்கள் மற்றும் அச் சேவையின் திருப்தி தொடர்பாகவும் பல தகவல்களை பெற்றுக் கொண்டோம்.


அந்த வகையில் மட்/மமே/முதலைக்குடா மகா வித்தியாலயத்தின் வழிகாட்டல் ஆலோசனை சேவையின் செயற்பாடுகள் பற்றி நோக்குவோம்,


இப் பாடசாலை 1 AB வகை பாடசாலை, இதன் தூரநோக்கானது"21 ஆம் நூற்றாண்டை நோக்கி 2025 இல் வலையத்தின் அதி சிறந்த பாடசாலை" அதனை நிறைவேற்றும் வகையிலே இப் பாடசாலையின் வழிகாட்டல் ஆலோசனை சேவையின் செயற்பாடுகள் மையப்படுத்தப்பட்ட முறையில் வருடாந்த செயற்பாடாக இடம் பெறுகின்றது.



இப் பாடசாலையின் வழிகாட்டல் ஆலோசனை சேவையின் செயற்பாடுகளானது பல்வேறு துறைகளின் ஊடாக நடைபெறுகின்றன.தனியாள்சார் வழிகாட்டல் செயற்பாடானது தரம் 6-11 வரையான மாணவர்களுக்கும் க.பொ.தர உயர;தர மாணவர்களுக்கும் இடம் பெறுகின்றன. இவர்களுக்கு உடல், உள ஆரோக்கியம், ஒழுக்கம், தொடர்பாடல் முறை, நெருக்கீடுகள தொடர்பான வழிகாட்டல் ஆலோசனை சேவை வழங்கப்படுகின்றன. ஆரோக்கியம் தொடர்பான செயற்பாடுகளானது தியானம், தினமும் முறையான உடற் பயிற்சிகள், சூரிய நமஸ்காரம் ஆகிய செயற்பாடுகளின் மூலம் ஆரோக்கியம் சம்பந்தமான வழிகாட்டல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.


நெருக்கீடுகள் என்பது பிரச்சினைகளை குறிக்கின்றது. பிரச்சினைகள் ஏற்படும் போது அதனை கையாளும் விதம், அதற்கான தீர்வுகளை சிறந்த முறையில் தாமாகவே எடுப்பதற்கு போதியளவான ஆலோசனை சேவை வழங்கப்படுகின்றன. உதாரணமாக, தாத்தாவின் மரணத்தினால் மனவுளைச்சலுக்கு உட்பட்டு பாடசாலைக்கு சமூகமளிக்காத மாணவிக்கு அதில் இருந்து விடுபடுவதற்கான ஆலோசனையானது, நாங்கள் ஆய்வுக்குச் சென்றிருந்த போது இடம்பெற்றது.


மேலும் மாணவர்களுக்கான தொடர்பாடல் முறைகள் சம்பந்தமான ஆலோசனை வழங்கப்படுகின்றன. தொடர்பாடல் எனும் போது பெற்றோர் பிள்ளைகள் தொடர்பான உறவுமுறை, பிள்ளைகள் ஆசிரியர்கள் தொடர்பான உறவுமுறை மற்றும் ஏனைய சமூக உறவுகளுடனான தொடர்பாடல் முறைகள் பற்றிய ஆலோசனையானது மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.இவற்றோடு தனியாளுக்கான ஆலோசனை சேவையில் மாணவர்களுக்காக, க.பொ. சாதாரண தர மாணவர;கள், க.பொ.தர உயர; தர மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை கட்டியெழுப்பும் வகையில்  செயற்பாட்டுகள் இடம்பெறுகின்றன. அத்துடன் கட்டிளமைப் பருவத்தினாpடையே உடல் வளரச்சி தீவிரமடைதல், (இதனால் கூச்சம், அச்சம் ஏற்படுதல்) அறிவு வளர;ச்சி முழுமை அடைவதும் அதற்கேற்ப பள்ளிப்போதனைகள் அமையாவிடின் அதனால் வெறுப்படைதல், பாலுணர்வு தொடர்பான பிரச்சினைகளுக்கு போதுமான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.


தனியாள் எனும் போது இங்கு அதிபர் ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களும் முக்கியமாகின்றனர் அவர்களின் தொழில்சார் முன்னேற்றம், மாணவர்களுடான தொடர்பாடல், கற்பித்தலின் போது ஒழுக்கம் சம்பந்தமான ஆலோசனைகள் இவர;களுக்கு வழங்கப்படுவதுடன் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாகவும், அவர்களின் ஆரோக்கிய நிலையை மேம்படுத்த ஆற்றக்கூடிய செயற்பாடுகள் தொடர்பாகவும் அதிபர் ஆசிரியரகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.இந்த வகையில் தனியாள்சார் வழிகாட்டலின் நோக்கானது சமநிலையான ஆளுமையை விருத்தி செய்தல், தமது நல்விருத்திக்கு தாமே பொறுப்பேற்க ஊக்குவித்தல், மன எழுச்சி சமநிலையைப் பேண வழிகாட்டல், தனியாள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஆலோசனையை வழங்கல் என்பனவாகும். உதாரணமாக மாணவர்களுக்கான அழகியல் செற்பாடுகளை அவர்களின் ஆக்கச் செயற்பாடுகளைக் கொண்டு கண்காட்சி ஒன்றை நடத்துவதன் மூலம் ஊக்கல் வழங்கப்படுகின்றன.


அடுத்து பாடசாலைகளில்  கல்விசார ஆலோசனை வழிகாட்டலும் வழங்கப்படுகின்றன. இதில் மாணவரின் கல்வி முன்னேற்றத்தை தொடரந்து கவனித்து நெறிப்படுத்தல், விசேட கல்வித் தேவைகள் உள்ள, கற்றல் குறைபாடுடையயோர் மீத்திறனுடையோர் ஆக்கத்திறனுடையோர் ஆகியோரை இனங்கண்டு அவர்களுக்குப் பொருத்தமான கற்றல் முறைகளை கையாளுதல், கற்றல் சார்பாக மாணவர்களின் ஊக்கல் நிலையை மேம்படுத்தல், உயர; கல்வியை தொடர்ந்து கற்கவும் கற்றலை இடைநிறுத்தாமல் இருக்கவும் கல்விசாரா வழிகாட்டல் செயற்பாடுகள் வழங்கப்படுகின்றது.


அத்துடன் இடைநிலை, உயர;தர மாணவர்களுக்கரிய பாடத் தெரிவு தொடர்பான கல்வி வழிகாட்டல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றனர அதாவது கூடைப்பாடங்களை தெரிவு செய்வதில் கருத்திற் கொள்ளப்பட வேண்டிய காரணிகள் தொடர;பாகத் தரம் 9,11,க.பொ.த (உத) மாணவர்களின் பெற்றோர்களை தெளிவுபடுத்தல். மேலும் உயர்கல்வியும் தொழில் வேலை உலகும் தொடர்பான ஆலோசனையுடன் பரீட்சைக்கு தயாராகும் முறைகள் பற்றி க.பொ.தர சதாரண தரம், க.பொ.தர உயர்தரம் மாணவர்களுக்கு போதுமான ஆலோசனை சேவையானது  வழங்கப்படுகின்றன. இவற்றோடு மொழிரீதியாக பல்கலைக் கழகத்தில் உள்ள கற்கை நெறிகள் பற்றிய ஆலோசனைகளும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.


இவற்றோடு பாடசாலை மட்ட ஆலோசனை சேவையில் தொழில் வழிகாட்டல் தொடர்பான செயற்பாடுகளும் இடம் பெறுகின்றன. இதில் தொழில் உலகுக்கு தேவையான திறன்களை விருத்தி செய்வதற்கு தேவையான ஆலோசனை மற்றும் உள்நாடு, வெளிநாட்டில் தொழில் வாய்ப்பினைப் பெற்றுக் கொள்வதற்க்கான முறைகள் பற்றிய வழிகாட்டலுடன் தொழில் வாய்ப்புக்கள், பகுதிநேரத் தொழில் போன்றவற்றின் தகவல்கள் என்பவற்றினை வழங்குதல். இதற்காக தொழில் ஒன்றில் மாணவர;முன்னேற்றமடைய கடின உழைப்பினூடாக முன்னேற்றமடைந்து .
பிரபல்யமான அப் பிரதேச நபர்களை அழைத்து தாம் தொழில் உலகில் முன்னேற்றமடைந்த முறை தொடர்பாக மாணவர்களுக்குத் தெளிவுபடுத்தல் செயற்பாட்டின் மூலம் மேற்கொள்கின்றனர்  அத்துடன் தொழில் தகைமை சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளவும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். இதற்காக தேசிய தொழிற்றகைமைச் சான்றிதழ் முறையைமை செற்படுத்துவதில் பங்களிப்புச் நிறுவன உறுப்பினர்கள் விழிப்புணர்வு கருத்தரங்குகள் மூலம் வழிகாட்டலை முன்னெடுக்கின்றனர் 


இப் பாடசாலையானது மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் சேவையோடு நின்றுவிடாது பெற்றோர்களுக்கான தொழில் வழிகாட்டல் ஆலோசனையையும் வழங்குகின்றன.



இச் சேவையானது பாடசாலை மட்டத்தோடு மட்டும் நின்றுவிடாது சமூக்திதிலுள்ளவர்களும் சிறந்த முறையில் பயனடைய வேண்டும் என்ற வகையில்  இப் பாடசாலையானது சமூகம்சார் ஆலோசனை சேவையினையும் முன்னெடுக்கின்றன.சமூகம்சார வழிகாட்டலில் சமூக உறுப்பினரகள் சமூகத்தில் இசைவாக்கம் பெறுவகற்கும், சமூகு விழுமியங்களை பேணல், நியமங்களுக்கு ஏற்ப நடத்தல், குழச்செயற்பாடு, தலைமைத்துவம், ஒத்துழைப்பு என்பவற்றினை ஏற்படுத்துவதற்காக பாடசாலையினால் சமூகத்திற்கு ஆலோசனை வழிகாட்டல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. 
பாடசாலை ஆலோசனை சேவையில் மது போதைப்பொருள் பாவனை, சிறுவர் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை சேவை என்பனவும் முன்னெடுக்கப்படுகின்றன. இவ் ஆலோசனையானது சமூக ரீதியிலும், பாடசாலை ரீதியிலும் இடம் பெறுகின்றன.


புகைத்தல், மது அருந்துதல், போதைப்பொருள் பாவித்தல் ஆகியவற்றைப் பழகிக் கொள்வதால் ஏற்படக்கூடிய தீயவிளைவுகளையும் அபாயங்களையும் பாடசாலை மட்டத்தில் வலுவாக அறிவுறுத்துதலால், இப்பழக்கங்கள் ஏற்படாமல் பாதுகாக்கின்றனர். அத்துடன் அப்படியான பழக்கங்கள் உள்ளவர்களை இனங்கண்டு ஆலோசனை வழங்குதலுடன் மட்டும் நின்றுவிடாமல் உளநோய் ஆலோசகரிடம் சிபார்சு செய்தல் ஆகிய செயற்பாடுகளை பாடசாலை ஆலோசனை சேவை முன்னெடுக்கின்றனர;. அத்துடன் புற்று நோய் தினம், போதைப்பொருள் தினம் தொடர்பான தினங்களை கொண்டாடுவதன் மூலம் சமூக ரீதியிலும், பாடசாலை ரீதியிலும் விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுப்பதுடன் அபாயகரமான ஔடதங்களால் ஏற்படும் பிரச்சினைகளை பாடசாலை சுவர்களில் வரைவதனூடாகவும், விழிப்புணர்வு கருத்தரங்குகளின் மூலமும் போதைப் பொருள் பாவனைக்கு எதிரான தமது வழிகாட்டல் ஆலோசனை செயற்பாடுகளை பாடசாலை மற்றும் சமூக ரீதியில் முன்னெடுத்துச் செல்கின்றனர்.


இவற்றுடன் இப் பாடசாலையானது சிறுவர் பாதுபாப்பு தொடர;பான ஆலோனைகளையும் பாடசாலை மற்றும் சமூக ரீதியில் முன்னெடுத்துச் செல்கின்றனர். சிறுவர் பாதுகாப்பானது தொடர்பாக பாடசாலை, சமூகம், குடும்பம் என்பவற்றில் எவ்வாறு காணப்படுகின்றது என்பது பற்றி ஆராய்வதுடன் பாதுகாப்பற்ற சிறுவர்களை இனங்கண்டு அவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதுடன் மாணவர்கள் மத்தியில் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பாக அறிவுறுத்தல்களை வீதி நாடகங்கள் மூலம் இலகுவான முறையில் தமது வழிகாட்டல் செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்கின்றனர்.



மேற்கூறியவற்றை தொகுதுத்து நோக்கும் போது இப் பாடசாலை, கல்வி, தொழில், பாதுகாப்பு, ஆரோக்கியம், ஒழுக்கம், போதைப் பொருள் பாவனை ஆகியவற்றிக்கான வழிகாட்டல் ஆலோசனை செயற்பாடுகளை பாடசாலை மற்றும் சமூக மட்டத்தில் கருத்தரங்குகள், ஊர்வலம், சுவர் ஒவியம், வீதி நாடகம், தனியாள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் ஆகிய வழிமுறைகளைக் கையாண்டு சிறப்பான முறையில் முன்னெடுத்துச் செல்கினறனர;. இதன் மூலம் பல்வேறு அநுகூலங்களையும் இப் பாடசாலையானது பெற்றுக்கொள்கின்றது.


வழிகாட்டல் ஆலோசனை சேவை ஒழுங்கமைக்கப்பட்டுள்ள விதத்தில் காரணமாக காணப்படுகின்ற அனுகூலங்கள்.
 ஆலோசனை என்பது மிகவும் செலுமையான வாழ்க்கைக்குத் தேவையான திறன்களை பெற உதவும் ஒரு சிகிச்சை முறையாகும். பிரச்சனைக்கு தீர்வு காணும் பொருட்டு ஆலோசகரை நேர்முகமாக சந்தித்து கலந்துரையாடி பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரு அணுகுமுறையே ஆலோசனையாக அமையப் பெறுகிறது.இவ்வாறான ஆலோசனை முறையானது பாடசாலை மாணவர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வண்ணம் பாடசாலையிலும் ஆலோசனை சேவை ஒன்று அண்மைக்காலமாக உருவாக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு ஆலோசனை சேவையை ஒன்றின் தோற்றத்திற்கு பல காரணங்களை அடிப்படையாக அமைகிறது.

  • கற்கைநெறி சார்பான தேவைகள்.
  • தொழில் வாழ்க்கைக்கான வழிகாட்டலின் தேவை.
  • குடும்ப அமைப்பு பலவீனம் அடைதல்.
  • சமூக, கலாசார மாற்றம்.
  • அறநெறி மனித விழுமியங்களில் செல்வாக்கு அருகிவருதல்.
  • உள்ளுர் யுத்தம் இயற்கை அனர்த்தம்.
  • கட்டிளமைப் பருவம் ஆனவர்களின் விருத்தியில் ஏற்படும் மாற்றம்.
  • பாடசாலை முறையில் ஏற்படும் சிக்கல்களை குறைத்தல்.
இது போன்ற பல காரணிகளின் தேவை கருதிப் சேவை உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உருவாக்கப்பட்ட ஆலோசனை சேவையின் மூலம் எமது எதிர்கால இளைய சமுதாயத்தினர் பல்வேறு அனுகூலங்களைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது. மற்றும் ஆசிரியர;கள், பெற்றோர் சமூகம் போன்றோரும் நன்மைகளை பெற்றுக் கொள்கின்றார்கள்.

கற்கை நெறி தொடர்பான தெளிவினை மாணவர்களுக்கு வழங்குவதன் மூலம் க. பொ. த உயரத்தின் மாணவரகள் எவ்வகையான பாடங்களைத் தெரிவு செய்வதன் மூலம் இலகுவாக பல்கலைக்கழகம் செல்லலாம் போன்ற தெளிவானதொரு முடிவினை எடுக்க வழிகாட்டல் சேவை துணைபுரிகின்றது.ஊதாரணமாக - ஒரு மாணவன் பல போட்டிகளுக்கு மத்தியில் இலகுவான முறையில் பல்கலைக்கழகம் செல்ல வேண்டுமாயின் அவன் நடனம், நாடகமும் அரங்கியலும், சித்திரம் போன்ற கலையுடன் தொடர்புடைய பாடல்களை தெரிவு செய்யுமாறு மாணவர்களுக்கு வழிகாட்டல் சேவை வளிப்படுத்துவதாக அமையும் போது மாணவனின் எதிர;காலம் சிறப்படையும்.


அவ்வாறே சட்டத்தரணியாக விரும்பும் ஒரு மாணவன் எவ்வாறான படங்கள் எடுப்பதன் மூலம் சட்டக் கல்வி கற்கலாம் போன்ற வழிகாட்டலை மேற்கொள்ளுதல். போன்ற விடயங்கள் மாணவர்களின் கற்றல் செயற்பாடு ரீதியாக அனுகூலங்களை ஏற்படுத்துகின்றது.க. பொ. த உயர்தரத்தில் பின்னர; வெற்றிப்பாதைக்கான வழிகாட்டலினை மாணவர்களுக்கு தெரிவித்தல்  - 


எடுத்துக்காட்டாக பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பை பெற்றுக் கொண்டால் நீங்கள் பயின்ற பாடப்பிரிவின் ணு பெறுமதிகேற்ப உரிய பல்கலைக்கழகம் மற்றும் பாட பிரிவிற்குட்பட்ட பட்டப் பாடநெறியினை எதிர்கால தொழில் வாய்ப்பிற்கு ஏற்றால் போல் தெரிவுசெய்தல்.


பல்கலைக்கழகம் செல்ல போதுமான பெறுபேறு கிடைக்காத போது உயர;தர பெறுபேற்றில் பல்கலைக்கழக அனுமதித் தகுதி லுநள கிடைத்தால் குறித்த பெறுபேறுகளுடன் வெளிவாரி பட்டப்படிப்பு அல்லது டிப்ளோமா மற்றும் தொழில் கற்கை நெறியினை மேற்கொள்ள முடியும். உயர;தரம் சித்தியடையாவிடின் தொழில் பயிற்சி ஒன்றின் மூலம் திறனாளராக மாறமுடியும்.  Nvq level சான்றிதல் கற்கை நெறி மேற்கொள்வதன் மூலமும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தொழிலை பெறமுடியும். இவ்வாறு க. பொ. த உயர;தர பரீட்சை எழுதிய மாணவனை வழிகாட்டல் மூலம் மாணவர்கள் சமூகத்தில் கல்வி  அறிவுடைய நற்பிரஜையாக மதிக்கப்படுவர;.


வழிகாட்டல் ஆலோசனை சேவையின் மூலம் ஆசிரியர்கள் பல நன்மைகளை பெற்றுக் கொள்கின்றனர் ஆசிரியர்கள், மாணவர்கள் பற்றிய முழு விபரத்தையும் அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கின்றது. அதாவது மாணவர்களது ஆற்றல்கள் அவர்களின் பலம், பலவீனம் அடைவு மட்டம், குடும்ப பின்னணி போன்றவற்றை அறிந்து கொள்வதால் அதற்கேற்ப மனவௌர்ச்சி முகாமைத்துவம் சார்பாக பணியாற்ற ஆசிரியர்களுக்கு முடிகின்றது. ஆசிரியர், மாணவர் மத்தியில் தொடர்புகள் அதிகரித்தால் சிறப்பான கற்றல் - கற்பித்தல் நிலைமைகளை ஏற்படுத்தி வெற்றி அடைய முடிகிறது.


பெற்றோர் சார்பாக கிடைக்கும் நன்மைகளை நோக்கும் போது தமது பிள்ளைகளின் ஆற்றல்கள், ஆளுமைக் கோலம், அவர்களின் பலம், பலவீனம், சமூகவியல் பண்புகள், அடைவுமட்டம் போன்ற பல விடயங்கள் பற்றியும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு பெற்றோருக்கு கிடைப்பதனால் அதன் மூலம் தங்கள் பிள்ளைகளை சிறப்பாக வழிநடத்த சந்தர்ப்பம் ஏற்படுகிறது. பெற்றோர் பிள்ளைகளின் உறவுகள் வலுப்பெறுதோடு தமது பிள்ளைகளின் பிரச்சனைகளைத் தீர்க்கவும் பொறுப்புக்களை ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும்.


ஒரு மாணவனின் குடும்பம் பொருளாதார ரீதியாக பின்னடைவில் காணப்படும் போது இங்குள்ள பெற்றோர;கள் மத்தியில் தினமும் வாக்குவாதம் அல்லது அடிதடி சண்டைகள் நிலவுதல் மற்றும் தந்தை வேலைக்கு சென்று வரும் பணத்தில் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து வீட்டில் உள்ளவர்கள் மீது சண்டை போடுதல் இவ்வகை செயற்பாடுகளின் காரணமாக ஒரு மாணவன் உளரீதியாக அதிகளவு பாதிப்பு அடைந்திருப்பான். இவ்வாறான மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளின் போது கற்றலில் நாட்டம் செலுத்தாத நிலை காணப்படும். இவற்றை ஆசிரியர்கள் அறிந்து மாணவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை கூறுவதன் மூலம் மாணவனை பிழையான நடத்தையின் இருந்து விடுவித்து கற்றலின் ஆர்வத்தை மாணவர்களுக்கு ஏற்படுத்தல்.


குறிப்பிட்ட பாடத்துறையில் குறைவான அறிவுள்ள மாணவனுக்கு அத்துறை சார்ந்த விசேட தெளிவினை ஏற்படுத்துவதன் மூலம் மாணவனின் எதிர்கால வாழ்க்கையை மேம்படுத்த முடியும்.ஊதாரணமாக- பாடசாலையில் அனேகமான மாணவர்களுக்கு பிடிக்காத பாடமாக கணிதம், ஆங்கிலம் என்பன காணப்படுகின்றது. இதனால் பல மாணவர்கள் க. பொ. த சாதாரண தர பரீட்சையில் இவ்விரு பாடங்களிலும் சித்தி அடையாமல் காணப்படும் நிலை உள்ளது. இதன் மூலம் மாணவர்கள் உள ரீதியாக பாதிப்படைகின்றனர் இவ்வாறான மாணவர்களை இனங்கண்டு அவர்களுக்கு பாடங்களின் முக்கியத்துவம் மற்றும் பாடம் தொடர்பான தெளிவினையும் வழிகாட்டல் சேவையினையும் மேற்கொள்ளும் போது இப் பாடங்களின் மீது அதிக கவனங்கள் மாணவர்கள்  முலம் எடுக்கப்பட்டு சிறந்த பெறுபேற்றினை அடையக் கூடியதாக காணப்படும்.


இன்றைய நவீன தொழிநுட்ப வளர்ச்சியின் காரணமாக இளவயது மாணவர்களிடையே காணப்படும் சீரிய ஒழுக்கம் பலக்கவழக்கங்கள் போன்றவற்றினை இனங்கண்டு வழிகாட்டல்களை வழங்குவதன் மூலம் சிறந்த பொருத்தமான மாணவ சமுதாயத்தை உருவாக்க முடியும்.எடுத்துக்காட்டாக இளைய சமூகத்தினர் இன்று போதைவஸ்து பாவனைக்கு அடிமையாக உள்ளதோடு, தொழில்நுட்ப புரட்சி காரணமாக பல சமூக வலைத்தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. 



தவறான முறையில் பயன்படுத்துதல் போன்ற செயல்பாடுகளின் மூலம் மாணவர;களிடையே பிழையான நடத்தை காணப்படுகிறது. இது ஏனைய மாணவர்களையும் பாதிப்பதாக அமைகின்றது. இவ்வகை மாணவர்களை கண்டறிந்து சிறந்த வழிகாட்டலை வழங்குவதன் மூலம் மாணவர்கள் நெறிபிரழ்வாத நடத்தையில் இருந்து விடுவித்து சிறந்த மாணவர் பிரஜையாக ஆக்க முடியும்.



கடந்த வருடம் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் அனைவரையும் வேதனைக்கு உள்ளாக்கியது. இக்குண்டுபிடிப்பின் மூலம் பல மாணவர;கள் தன் உறவுகளை இழந்து மன ரீதியாக பாதிப்படைந்து காணப்பட்டன. இம்மாணவர;கள் பாடசாலையின் கற்றல் நாட்டம் அற்றவரகளாகவும் வன்முறை ரீதியான செயற்பாடுகளை மேற்கொள்ளுவதாகவும் காணப்பட்டனர;. இவ்வாறானேறை இனம் கண்டு வழிகாட்டளை  ஏற்படுத்துவதன் மூலம் மாணவர;களின் உள ரீதியான தாக்கத்தை குறைத்து சாதாரண நிலை மாணவனாக ஆக்குதல்.சமூக, பொருளாதார, கலாசார மாற்றங்கள் நாளுக்கு நாள் மிக விரைவாகப் ஏற்படுகின்றன. பாரம்பரிய நடை உடை பாவனை, மனப்பாங்குயாவும் மாறிக்கொண்டு வரும் நிலையில் மாணவனின் நடத்தையின் தாக்கத்தினை ஏற்படுத்தி வகுப்பறையில் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டை முன்னெடுக்க தடையாக அமைவதனாலும் மாணவர;கள் நவீன மாற்றங்களுடன் இசைவு காண்பதற்கான  ஆயத்த நிலை வழிகாட்டல் சேவையினை மாணவர;களுக்கு ஏற்படுத்துதல். இவ்வாறான வளங்களை பிரதிபலிக்கும் வண்ணம் நாங்கள் கள ஆய்வினை மேற்கொண்ட பாடசாலையின் வழிகாட்டல் தேவை அமையப் வருகின்றமை இப் பாடசாலைக்கும், சமூகத்திற்கும் கிடைக்கப் பெறுகின்ற பாரிய வளமாகும்.


இப்பாடசாலையின் அமையப் பெற்ற வழிகாட்டல் சேவை மூலம் அதிபர;, ஆசிரியர;, மாணவர;கள், பெற்றோர;, சமூகம் போன்ற அனைவரும் பலதரப்பட்ட அனுபவங்களை வழிகாட்டல் சேவை மூலம் பெற்றுக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.இன்று அதிக மன உளைச்சலுக்கு ஆளாகும் மாணவர;களாக காதல் மற்றும் பாலியல் ரீதியான பிரச்சனைக்கு உட்படுத்தப்படும் மாணவர;களாக காணப்படுகின்றனர் இவ்வாறான மாணவர்களை அறிந்து அவர்களுக்கு தேவைப்படும் ஆலோசனைகளை சிறந்த முறையில் வழங்கப்பட்டு அவர்களின் பிரச்சனைகள் தீரக்கப்பட்டு கல்வி செயல்பாடுகளில் ஈடுபடுத்திக் கொள்ளவும் வசதி உண்டாகும்.


மாணவர்களுக்கு அவர்களின் படிப்பை மோசமாக பாதிக்கும் உளவியல் சிக்கல்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து சரியான வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.  இந்த அமர்வுகள் மூலம், மாணவர்கள் சில சிக்கல்களைத் தீர்க்கும் திறன்களை வளர்த்துக் கொள்ள முடியும், இது அவர்களின் வாழ்க்கையைச் சுற்றியுள்ள குறிப்பிட்ட சிக்கல்களைச் சமாளிக்க ஒரு அளவிற்கு உதவுகிறது.மாணவர்கள் தங்கள் பாடசாலைவாழ்க்கையில் எதிர்கொள்ளும் வெவ்வேறு சூழ்நிலைகளை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து அறிவுறுத்தப்படுகிறார்கள்.  உதாரணமாக, அவர்கள் எவ்வாறு பணிவுடன் பேச வேண்டும் அல்லது சகாக்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும்.  இந்த அறிவுரை அவர்கள் சில சூழ்நிலைகளில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான முன்னோக்கை வழங்கும்.



இது ஒரு மாணவரின் நடத்தையை வடிவமைக்க உதவுகிறது, மேலும் அவற்றில் போதுமான ஒழுக்கத்தை வளர்க்கவும் உதவுகிறது.  சரியான வழிகாட்டுதல் அவர்களின் இலக்குகளை அடைய உதவுகிறது, நன்கு வழிநடத்தப்பட்ட மற்றும் ஆலோசனை பெற்ற மாணவர்களுக்கு என்ன செய்ய வேண்டும், எப்படி சிறந்த முறையில் விஷயங்களைச் செய்வது என்று தெரியும்.பாடசாலைசமூகத்தில் மற்றவர்களுடன் நிம்மதியாகவும் இணக்கமாகவும் வாழ்வது எப்படி என்பதை மாணவர்கள் கற்றுக்கொள்கிறார்கள்.  



இது மாணவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் பல்வேறு அனுபவங்களைப் பற்றி ஆசிரியர்களுடன் பேச அனுமதிக்கிறது.  பெற்றோருடன் பகிர்ந்து கொள்ள முடியாத பிரச்சினைகளை அவர்கள் பகிரங்கமாக பகிர்ந்து கொள்ளலாம்.ஆல்கஹால், போதைப்பொருள், தனிப்பட்ட உணர்வுகள் அல்லது எந்தவிதமான துஷ்பிரயோகம் தொடர்பான பேச்சுக்கள் வெளிப்படையாக விவாதிக்கப்படலாம்.  வழிகாட்டுதலும் ஆலோசனையும் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் எவ்வாறு செயல்பட வேண்டும் மற்றும் நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான ஆலோசனைகள் வழங்கப்படுவதால் மாணவர்களை சிறந்த மனிதர்களாக ஆக்குகின்றன.இது அவர்களின் வாழ்க்கையில் சில சிரமங்களுக்கு உள்ளாகும் மாணவர்களுக்கு கேள்விகளைக் கேட்கவும் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை மூலம் தெளிவுபடுத்தவும் உதவுகிறது.  எனவே, பொறுப்பான நபர் உதவ தயாராக இருப்பதால், எந்த பயமும் இல்லாமல் ஆலோசனை கேட்க அவர்களுக்கு உதவுகிறது.
முழுமையான தொழில் ஆலோசனைகளை அவர்களுக்கு வழிகாட்டவும் உதவுகிறது.இளம் மனங்களுக்கு முறையான வழிகாட்டுதல் தேவை, அது அவர்களை சமூகத்தில் நிற்கவும் தங்களுக்கு ஒரு பெயரை உருவாக்கவும் உதவும்.  ஆலோசனை என்பது அவர்களின் தொழில் வாழ்க்கை தொடர்பான முடிவுகளை எடுக்க அவர்களுக்கு உதவுவது மட்டுமல்லாமல், இது அவர்களுக்கு நம்பிக்கையையும் மனரீதியாகவும் சமூக கஷ்டங்களுக்கு அவர்களை தயார்படுத்துகிறது.ஆசிரியர்கள் 


குழந்தைகளுக்கு அவர்களின் பலத்தை அடையாளம் காணவும், அவர்களின் ஆர்வங்களை கூர்மைப்படுத்தவும், அவர்களின் கனவுகளை ஆராய தொழில் விருப்பங்களை வழங்கவும் உதவுகிறார்கள்.  இந்தியா டுடேயில் ஒரு சமீபத்திய செய்தி அறிக்கையில், சுமார் 85மூ மாணவர்களுக்கு உயர் கல்விக்கு எந்த தொழில் விருப்பங்களைத் தேர்வு செய்வது என்பது குறித்து எந்த துப்பும் இல்லை.


வாழ்க்கை தேர்வு மற்றும் தொழில் தேர்வு ஆகிய இரண்டிற்கும் ஆலோசனை வழங்கப்படல் பெற்றோர்களும் குழந்தைகளும் சிறந்த பொறியியல் அல்லது பல் கல்லூரிகளில் சேர நல்ல தரங்களைக் கொண்டுவருவதாக நம்புகிறார்கள், அது அவர்களுக்கு வெற்றிகரமான வாழ்க்கையைத் தரும்.  ஆனால், குழந்தைகளின் நலன்களை அறிந்து கொள்வதும் முக்கியம், இங்கே ஆசிரியர் முக்கிய பங்கு வகிக்கிறார்.  


குழந்தைகளுக்கான சரியான புலத்தைத் தேர்ந்தெடுப்பது முற்றிலும் சுய மதிப்பீட்டைச் சார்ந்தது.சுய மதிப்பீட்டில் குழந்தையின் திறன்கள், ஆர்வமுள்ள பகுதி, பகுப்பாய்வு திறன், பணி நடை மற்றும் ஆளுமை ஆகியவற்றைக் கவனித்தல் அடங்கும்.  பரந்த தொழில் விருப்பங்களுடன், ஆசிரியர்கள் குழந்தையின் சமீபத்திய போக்குகள், வெவ்வேறு தற்போதைய முன்னேற்றங்கள், கோரிக்கைகள் மற்றும் குழந்தையின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நிதி வாய்ப்புகள் ஆகியவற்றைக் கொண்டு குழந்தையை சித்தப்படுத்த வேண்டும்.
எனவே வழிகாட்டல் சேவை ஒழுங்கமைக்கப்பட்டுள்ள விதத்தின் காரணமாக காணப்படுகின்ற அனுகூலங்களை சுருக்கமாகக் கூறுவோமாயின் பாடசாலை மாணவர;கள் திறமையாக கற்கவும், கற்கைநெறிகளை தேர;ந்தெடுக்கவும், மேம்பட்ட கல்வி அடைப்புகளை ஏற்படுத்தவும், எதிர;படும் இடர;களை அகற்றவும் உதவும் கல்வி வழிகாட்டலாக பரிணமிக்கின்றது. மேலும் மாணவர;கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு முன்னேறவும் கல்வி வழிகாட்டல் துணை புரிகின்றது. புதிய பாடம், கற்கைநெறி அவற்றை பின்பற்ற தேவையான தகுதி என்பவற்றை மாணவர்களுக்கு முன்கூட்டியே அறியச் செய்து அதற்கு தகுந்தவாறு திட்டமிடச் செய்தல் போன்றன கல்வி வழிகாட்டலின் அனுகூலமாக அமைகிறது.


இச்சேவையின் செயற்பாடுகளின் திருப்தி தொடர்பாடல் ஆராய்க
        
இப்பாடசாலையானது ஆலோசனை வழிகாட்டல் சேவையினை கொண்டுள்ள போதும் பல்வேறு குறைபாடுகளையும் கொண்டுள்ளது. இந்தவகையில் இவ் ஆலோசனை சேவையில் திருப்தி இல்லாத தன்மையே காணப்படுகினற்து எனலாம். அதற்கு பல்வேறு வகைப்பட்ட காரணங்கள் காணப்படுகினற்ன அவற்றை எடுத்து நோக்குவோமெனில்
நேரமின்மை அதாவது பாடசாலையில் ஆலோனை வழிகாட்டலுக்குப் பொறுப்பாக காணப்படும் ஆசிரியர் வேறு வகுப்புகளுக்கு செல்லும் போது குறிப்பிட்ட ஆசிரியர் ஆலோசனை ஏனையவர்களுக்கு வழங்க முடியாத நிலை காணப்படுகின்றது. இதனால் உரிய நேரத்தில் குறிப்பிட்டவர்களுக்கு ஆலோசனை வழங்க முடியாத நிலை காணப்படுகின்றது. அதுமாத்திரமின்றி அனைத்துப் பிரிவு வகுப்பிலுள்ளவர்களுக்கும் ஆலோசனை வழங்குவதற்கு இப்பாடசாலையில் ஒரு ஆசிரியர் மாத்திரமே காாணப்படுகின்றனர் சில வேளைகளில் குறித்த ஆலோசனை வழிகாட்டலுக்குப் பொருத்தமான ஆசிரியர்வராது விடின் அன்றைய தினம் பாடசாலையில் வழிகாட்டல் ஆலோசனை சேவை இடம்பெறாமல் போகின்றது எனலாம் இது இச்சேவையின் திருப்தி இல்லாத தன்மையினை காட்டுகின்றது.



இடப் பிரச்சினை இப்பாடசாலையில் வழிகாட்டல் ஆலோசனை சேவைக்கென்று தனியான ஒரு அறை காணப்படுகின்றது. ஆனால் அவ்வாறு காணப்படும் அறையானது போதிய இடவசதியை கொண்டு காணப்படாத தன்மையினை கொண்டுள்ளது. இதனால் வழிகாட்டல் ஆலோசனைக்குரிய சில புகைப்படங்கள், சுவரொட்டிகள் மற்றும் சஞ்சிகைகள், வழிகாட்டல் ஆலோசனையோடு தொடர்புடைய பல்வேறு பொருட்கள் என்பனவற்றை இவ்வறைக்குள் வைக்க முடியாத தன்மையினை கொண்டு காணப்படுகின்றது. மற்றும் ஒரே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க முடியாத தன்மையும் காணப்படுகின்றது, ஏனெனில் இப்பாடசாலையில் பாடசாலை வழிகாட்டல் சேவைக்கென்று காணப்படும்  அறையானது மிகச் சிறியளவில் காணப்படுவதே இதற்கு முக்கிய காரணம் எனலாம்.


இப்பாடசாலையின் அதிபர் ஏனைய ஆசிரியர்களின் போதியளவான ஒத்துழைப்பின்மை காரணமாகவும் இச்சேவையில் திருப்தியற்ற நிலை காணப்படுகின்றது எனலாம். அதாவது இப்பாடசாலையில் இச் சேவை காணப்பட்டாலும் கூட இப்பாடசாலையில் கற்பிக்கும் சில ஆசிரியர்கள் இச்சேவைக்கு உரிய முறையில் தமது பங்களிப்பினை வழங்க முடியாமல் இருக்கின்றனர;. ஏனெனில் இச்சேவை தொடர்பாக தமக்கு அறிவுறுத்தல்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் அதனால் தாம் எந்தவித உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்க தேவையில்வையென்றும் கூறுகினற்னர் ஆசிரியர்கள் தங்களுக்கென்று கொடுக்கப்பட்ட பாடங்களை மாத்திரமே மாணவர்களுக்கு கற்பிக்கின்றனர் ஆனால் இவ் வழிகாட்டல் சேவை தொடர்பாக கவனத்தில் கொள்ளுவதில்லை. இதற்கு இப்பாடசாலையின் அதிபரானவர் பொறுப்புடையவராக அமைதல் வேணடும். அதிபரானவர் அனைத்து ஆசிரியரக்ளையும் வழிகாட்டல் சேவையில் ஈடுபடுவதற்கு வாய்ப்பளித்து அவர்களை ஊக்கப்படுத்தல் வேணடும். இவ்வாறு இப்பாடசாலையில் காணப்படாதது ஒரு குறைபாடாகும்.


        
ஆலோசனை சேவை தொடர்பான முக்கியத்துவம் பாடசாலை சமூகத்தினால் உணரமுடியாத தன்மையானது இச்சேவையின் திருப்தியற்ற தன்மையினை காட்டுகினற்து எனலாம். சமூகத்திற்கு வழிகாட்டல் ஆலோசனை சேவை தொடர்பில் ஒரு புரிந்துணர்வு இல்லா தன்மை காணப்படுகின்றது. இதனால் இச்சேவையின் முக்கியத்துவம் பற்றி சமூகத்தினரால் அறிந்து கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. அதுமாத்திரமின்றி மாணவர்கள் அடையும் பயன், மற்றும் இச்சேவையின் மூலம் சமூகத்தார் ஆகியோர்  பயன் தொடர்பாக அறியமுடியாத நிலையும் இச்சேவையின் திருப்தியற்ற நிலையினை காட்டக்கூடியதாகவுள்ளது.
      

ஆலோசனை பெறும் மாணவர்களை பற்றிய; இழிவுப்பார்வை, பாடசாலைமட்ட சமூகம் குறித்த செயற்பாடுகள் தொடர்பான இழிவுப்பேச்சு காணப்படல் போனற்ன இச்சேவையின் திருப்தியற்ற நிலையினை காட்டுவதாகவுள்ளது. அதாவது ஆலோசனை பெறும் மாணவர்கள் ஏதோ ஒரு குறைபாட்டினால் பாதிக்கப்படடுள்ளனர். 

அதனால்தான் ஆலோசனை பெறுகின்றனர;. எனும் ஒரு தப்பான கண்ணேட்டத்தில் மாணவர்களை பாடசாலை சமூகம் பாரக்கின்றது. மற்றும் இழிவுப்பேச்சுக்களையும் பேசுகின்றனர் இதனால் ஆலோசனைக்குட்படும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து கொண்டே செல்கின்றது.


 முறையான ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு வழிகாட்டல்சேவை உள்ளதா என்பது தொடர்பில் ஒரு இழிவுப் பேச்சானது காணப்படுகின்றது. இது இச்சேவையில் காணப்படும் திருப்தியற்ற நிலையினை காட்டுன்றது.


விடயப்பரப்புக்களை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் என்பனவும் இவ்வழிகாட்டல் சேவையின் திருப்தியற்ற தன்மையினை காட்டுகின்றது. விடயப்பரப்புக்களை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் காணப்படுதலும் அவற்றினை நடைமுறைப்படுத்த உரிய வகையில் ஆளணியினர; காணப்படாமையும் வழிகாட்டல் ஆலோசனையின் திருப்தியற்ற நிலையினை காட்டுகின்றது.ஆலோசனை சேவை தொடர்பாக பெற்ற நன்மைகள் தொடர;பாக மதீப்படுகள் மேற்கொள்ளப்படாமை. அதாவது ஆலோசனை சேவை தொடர்பாக செயற்பாடுகள் மேற்கொண்டிருப்பின் அது தொடர்பாக எந்தவொரு மதிப்பீடும் மேற்கொள்ளப்படாமல் இருந்தால் இச்சேவையின் தரம் அறியப்படாமல் போயிடும். எனவே உடனுக்குடன் இச்சேவை தொடர்பாக பல்வேறுபட்ட மதிப்பீடுகளை மேற்கொள்ள வேண்டும். மதிப்பீடு ஒன்று இருந்தால் மாத்திரமே குறித்த சேவையால் அனைவரும் பயனடைந்துள்ளனரா என்பதனை அறிந்து கொள்ள முடியும்.  


செயற்பாடுகளை மேற்கொள்ள ஒத்துழைப்பு இன்மை. சில ஆசிரியர்கள் தாங்கள் உயர்தரத்திற்கு கற்பிப்பவர்கள் அதனால் இடைநிலை வகுப்பிலுள்ள பிள்ளைகளுக்கு தாங்கள் ஆலோசனை வழங்க முடியாது. அது தங்களுக்கான பொறுப்போ, கடமையோ இல்லை என்று செயற்படுகின்றனர் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு கட்டாயம் கூட்டு முயற்சி அவசியம். ஆனால் அப்பாடசாலையில் இம்முறை காணப்படாதது சேவையின் திருப்தியற்றநிலையை காட்டுகின்றது.வெளிக்களச் செயற்பாடுகளுக்கான ஒத்துழைப்பின்மை (சுற்றுலாப்பயணம்) வழிகாட்டல் ஆலோனை சேவை தொடர்பாக களைமாணவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள சகல ஆசிரியர்களினதும் ஒத்துழைப்பு மிகவும் இன்றியமையாததாகும். ஆனால் இந்நிலமை பாடசாலைகளில் தொடர்வதில்லை. சில வேளைகனில் அனைத்து பொறுப்புக்களையும் வழிகாட்டலுக்குப் பொருத்தமான ஆசிரியரே செய்ய வேண்டிய நிலையும் காணப்படுகின்றது. சில வழிகாட்டல் சேவையினை வழங்கும் ஆசிரியர;கள் மாத்திரம் சுற்றுலாப்பயணங்களை ஒழுங்கு செய்வதால் அவருக்கு எந்தவித உதவிகளும் வழங்கப்படாமையினால் வழிகாட்டல் ஆலோசனை தொடர்பான சுற்றுலா செல்வது தடைசெய்யப்படுகின்றது.


ஆலோசனை வழிகாட்டலில் பல பிரிவுகள் காணப்படுகின்றது. முதலாவது உளவியல்பிரிவு, இதில் பார்வைக் குறைபாடுள்ள பிள்ளைகள், வலது குறைந்த பிள்ளைகள் போன்ற பல்வேறு பிள்ளைகள் காணப்படுகினற்னர்   
அந்தவகையில் தரம் 06-11 வரையுள்ள மாணவர;களை மீத்திறன் உள்ள பிள்ளைகளையும், மெல்ல கற்கும் பிள்ளைகளையும் வேறுபடுத்தி அவர்களுக்கு பொருத்தமான முறையில் பிரதேச செயலகத்தினாலும், வைத்திய ஆலோசனை குழுவினாலும் ஏனைய நிறுவனங்களினாலும் அவர்களுக்கேற்ப பயிற்சி வழங்கப்படடு; கற்பிகக்ப்பட வேணடும். இது ஆலோசனை சேவைக்குழுவின் பணி ஆனால் இப்பாடசாலையில் ஓரளவு திருப்தியாக காணப்பட்டாலும் அதிகம் திருப்தி அற்ற நிலையே காணப்படுகின்றது.


அதற்கு காரணம் மெல்ல கற்கும் மாணவர்கள், மீத்திறன் கூடிய மாணவர்களும் ஒன்றாக கற்பதால் மெல்ல கற்கும் மாணவர்களிக் கல்விநிலை குறைவடைகின்றது. அத்தோடு பாடசாலை ஆசிரியர்கள், அதிபர் பெற்றோர்களின் செயற்பாடுகளினால் இவ்வாலோசனை சேவையை நாடாது இருப்பதனால் இச்சேவையின் பயன்பாட்டை அடைய முடியாதிருக்கின்றனர்  இதன் மூலம் இச்சேவையின் அதிருப்தி நிலையினை காட்டுகின்றது. தற்காலங்களில் மீத்திறன் கொண்ட மீத்திறன் அற்ற குழந்தைகளை ஒன்றினைத்து சமமான கல்வி போதிக்கப்படுகின்றது. இதனால் திருப்தி குறைவான நிலையில் காணப்படுகின்றது. இருவரையும் ஒன்றினைத்து சமமான கல்வி வழங்குவதனால் மெல்ல கற்கும் மாணவர்களின் கல்விநிலை பாதிக்கப்பட்டு அவரகள் தொடர கல்வியினால் வகுப்பேற்றப்படுகின்றனர் அதனால் அவர்களின் அறிவு குறைவான நிலையிலே காணப்படும். இது திருப்தி குறைந்த நிலையினை காட்டுவதாக காணப்படுகின்றது. சில மாணவர்கள் தரம் ஒன்பதோடும், சில மாணவர்கள் க.பொ.த (சா/த)ரத்துடனும் இடைநிறுத்தப்படுகின்றனர் இதனால் அதிருப்தி நிலையே காணப்படுகின்றன.


இந்த ஆலோசனை குழுவினால் புலமை பரிசில் பரீட்சையில் மாணவர்கள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் அவர்களை அளவு ரீதியாக இனங்காணக்கூடியதாகவுள்ளது. இது ஆலோசனை வழிகாட்டல் சேவையில் திருப்தியை ஏற்படுத்துகின்றது. அத்தோடு மேலும் திருப்திநிலையினை ஏற்படுத்த 50 புள்ளிகள் குறைவாக பெற்ற மாணவர்களை இனங்கண்டு அவர்களுக்கு ஏற்ற வகையில் கல்வியானது கற்பிக்கப்படல் வேணடு;ம். ஆனால் இவ்வாறான புள்ளிகளைப் பெற்ற மாணவர;களுக்கு ஆசிரியர;கள் கற்றுக்கொடுக்க பின்வாங்குகின்றனர;. இது பாடசாலை ஆலோசனை சேவையின் திருப்தியற்ற நிலையினை காட்டு;கின்றது. இச்சேவையின் பொருத்தமான நோக்கம் மாணவர;களுக்கு பொருத்தமான கல்வியை வழங்குவதாகும். ஒவ்வொரு மாணவனின் நிலைக்கும் பொருத்தமான நிலைக்கேற்ப கல்வியை வழங்குவது ஆசிரியரின் நோக்கம் ஆகும். சமாந்தரமாக கல்வியை வழங்குவது சிறந்த கல்வியாக அமையாது. இது திருப்தியாக அமையாது. மெல்லக் கற்கக்கூடிய , குறைபாடுள்ள மாணவர;களுக்கு கற்பிக்கப்படும் போது கடமையுணர;வோடும் ஒரு தியாக உணர;வோடும் ,கருணையுள்ளம் கொண்டவராகவும் காணப்பட்டால் மாத்திரமே இச்சேவையின் திருப்திநிலையினை அடையலாம்.


இச்சேவையின் திருப்திக்கு மிக முக்கிய காரணம் அனைத்து காரணிகளும் சிறப்பாக காணப்படல் வேணடு;ம். வறுமைக் காரணி, சமூகக்காரணி, குடும்பச்சூழ்நிலை போன்ற பல்வேறு காரணிகள் காரணமாக மாணவர;கள் பாடசாலையில் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றனர.; இவர;களை நெறிப்படுத்தும் வகையில் பாடசாலையில் ஆலோசனைக்குழு செயற்படுத்தப்படல் வேண்டு;ம். அப்போதுதான் ஆலோசனைக்குழுவின் செயற்பாடு திருப்தியானதாக அமையும்.
பாடசாலையின் ஆலோசனை சேவையை வெற்றியடையச் செய்வதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் முன் வைக்குக?

  • இவ் ஆலோசனை சேவையை வெற்றியடைவதற்கான முதல் நடவடிக்கையாக பயிற்சி பெற்ற ஆசிரியர்களை வழிகாட்டல் ஆலோசனை சேவையில் நடைமுறைப்படுத்தல்.
  • மற்றும்பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் பயிற்சி பெறாத ஆசிரியர்கள் சில ஆலோசனைகளை பெற்று மாணவர்களை வழி நடத்தல்.
  • ஆலோசனை வழிகாட்டல் மேற்கொள்வதற்காக ஆசிரியர்களின் மனநிலையில் மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும். மாணவர்களின் இச் சேவை தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.பெற்றோர்களுக்கு கருத்தரங்கு நிகழ்ச்சித்திட்டங்களை வழங்க வேண்டும். விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை வழங்க வேண்டும்.
  • அத்தோடுஇமாணவர்களுக்கும்இஆசிரியர்களுக்குமஇ;பெற்றோர்களுக்கும்இசமூகத்தின் மத்தியிலும் விழிப்புணர்வு ஆலோசனை வழிகாட்டல் தொடர்பாடலை மேம்படுத்தல்; மற்றும் கச்சேரிகளினதும்இசமூக நிறுவனங்களினதும்இமத நிறுவனங்களின் உதவியை ஏற்படுத்தி இ இச்சேவையை விருத்தியடைய செய்தல் வேண்டும்.
  • மாதத்திற்கு ஒருமுறை இதற்குரிய பயிற்சியை வழங்க வேண்டும். அரசாங்கத்தினால் இவ்வாறு குழுவை மேம்படுத்த நிதி உதவியைப் பெற வேண்டும.; வசதி படைத்;தவர;களிடம் இருந்து நிதியை பெற வேண்டும்
  • அத்தோடு வறுமையுடைய பிள்ளைகள் வகுப்பறையில் இனங்கண்டு மாணவர்களுக்கு வெளிக்காட்டாது இரகசியமாக மாணவர்களின் அடிப்படை தேவைகளை; இனங்கண்டு மேற்கொள்வதன் மூலம் வெற்றி அடையச் செய்யலாம். அத்தோடு இதனை வெற்றியடையச் செய்ய வகுப்பாசிரியர்கள் ஆலோசனை துணையுடன் வறுமை உட்பட சாப்பிடாமல் வந்த பிள்ளைகளை இனங்கண்டு அவர்களுக்கு இரகசியமான முறையில் உணவுகளை வழங்கவேண்டும். 
  • அத்தோடு மாணவர்களின் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும.;பொருத்தமான உணவு வகைகளை வழங்க வேண்டும். இதற்காக விழிப்புணர்வு ஆலோசனை குழு ஆலோசனைகள் வழங்க வேண்டும்.;
  • ஆசிரியர்களை வழிப்படுத்தல்.உதாரணமாக கண்பார்வை குறைபாடான மாணவர்களை இனங்கண்டு இலவசக் கண்ணாடிகளை எடுத்துக் கொடுத்தல் இவை சம்பந்தமாக பெற்றோருக்கு வழிகாட்டுதல்.
  • சிறந்த திட்டமிடல்இ மதிப்பிடல் காணப்படல் வேண்டும். அதாவது ஆசிரியர்களின் மூலம் தங்களின் திறன்களையும்  திறமைகளையும் இனங்காணல.; பிள்ளைகளின் ஆளுமை மட்டத்தை கண்டு கொண்டு அதற்கேற்றவாறு ஆலோசனைகளை செய்தல்.
  • வழிகாட்டல் ஆலோசனை சேவைக்கான இட வசதிகளை பெற்றுக் கொடுப்பதோடு பொருட்களை வைப்பதற்கு அனுமதிகள் மற்றும் தேவையான உபகரணங்கள் அதிபர் பெற்றுக்கொடுத்தல்.
  • பெற்றோர்களின் உதவியைப் பெறல் அதாவது ஒரு மாணவனின் ஆளுமையை வெளிக் கொண்டு வருவதற்கு ஆரம்ப இடம் குடும்பச் சூழல் இங்கு பெற்றோர்கள் இடம்பெறுகின்றனர். மாதத்தில் ஒரு முறை கூட்டம் கூடுதல் மாணவர்களின் நிலையை தனிப்பட்ட முறையில் கலந்துரையாடுதல்.
  • ஆலோசனை சேவையை மேலும் வெற்றியடைய செய்வதற்கு நேரசூசிகள் ஒழுங்காக தயாரிக்கப்பட்டு இருத்தல் வேண்டும். மாணவர்களுக்கு உரிய நேர நேரசூசிகள் ஆசிரியர்கள் உரிய நேர நேரசூசிகள் என வழங்கப்படல் வேண்டும்.
  • சிறந்த பின்னூட்டல்கள் வழங்கல்.
  • முறைமை சாரா குழுக்கள் ஆலோசனை சேவை வழங்கலில் உதவி செய்தல். உதாரணமாக பழைய மாணவர் சங்கம் சமூக குழுக்கள் இவைகள் மூலம் வழிகாட்டல் ஆலோசனை சேவைக்கு உதவிகளை வழங்க ஆலோசனை செய்தல்.
  • ஆசிரியர் அறிந்தோ அறியாமலோ பிள்ளையின் உள அழுத்தத்தை அதிகரிப்பதாக செயற்படலாகாது.ஆலோசனை தொடர்பான எளிமையான அறநெறிகளை விளங்கி விஞ்ஞான முறையை கையாண்டு அவற்றுக்;கமைய பிள்ளை இடத்தில் அழுத்தம் அதிகரிக்கும் வகையில் ஆசிரியர் தொழிற்பாடுகளை  நீக்கல். உதாரணமாக சில ஆசிரியர்கள் கடுமையான தண்டனைகளை சில பிள்ளைகளுக்கும் விசேட சலுகைகள் சில பிள்ளைகளுக்கும் சில பிள்ளைகளுக்கும்  வழங்குதல் இவ்வாறான செயல்களில் இருந்து விடுபட்டு அன்பாகவும் மரியாதையாகவும் மாணவர்;களுடன் நடந்து கொள்ளல் வேண்டும்.



எனவே ஒவ்வொரு  பாடசாலையிலும் வழகாட்டல் ஆலோசனை சேவை பிரிவ இருத்தல் அவசியமாகும். இதன் மூலமே பாடசாலையில் பல்வேறு பிரச்சினைகளுடன் வரும் மாணவர;களை இனங்கன்டு அவர;களுக்கு தேவையான தீர;வுகளை வழங்க முடியும்.மற்றும் இச் சேவையில் ஆசிரியர;களை பயிற்றுவித்து வழிகாட்டுவதன் மூலம் ஒரு சிறந்த மாணவர;கள் பட்டாளத்தை சமூகத்திற்கு வெளியேற்றுவதன் மூலம் நண்மை சமுகத்தை அடையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. எனவே ஒவ்வொரு  பாடசாலையிலும் வழகாட்டல் ஆலோசனை சேவை பிரிவு இருத்தல் அவசியமாகும்.


இதன்மூலம், அவர்கள் தங்கள் வகுப்பில் உள்ள மற்றவர்களைப் பாராட்டவும் கற்றுக்கொள்கிறார்கள்.மாணவர்களுக்கும் பாடசாலைநிர்வாகத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க இது உதவுகிறது, ஏனெனில் அவர்கள் அலுவலகத்தில் ஒரு சரியான ஆலோசனை சேனல் மூலம் தங்கள் பிரச்சினைகளுக்கு வழிகாட்ட முடியும்.மாணவர்கள் தொழில், படிப்புகள் மற்றும் வேலைகள் குறித்து விரிவான ஆலோசனையைப் பெறுகிறார்கள், அவை சரியான மற்றும் தகவலறிந்த தேர்வு செய்ய உதவுகின்றன, மேலும் பள்ளியுடன் முடிந்தபின் அவர்கள் என்ன செய்ய முடியும் என்பதைப் புரிந்துகொள்கிறார்கள்.


Comments

Popular posts from this blog

போட்டி பரீட்சை நுண்ணறிவு வினாக்கள்