ரொலக்ஸ் கிரிக்கெட் கிளப்(பளளுவெவ) ROLEX CRICKET CLUB

பளளுவெவ வரலாற்றில் ஒரு ஏடு





Balaluwewa rolex
.












ஒவ்வொரு பிரதேசங்களும் ஒவ்வொரு வளத்தினால் சூழ்ந்து காணப்படும் அவ்வாறு இவ் பளளுவெவ பிரதேசமும் பல்வேறு வளங்களை சூழ்ந்து காணப்படுகிறது. பல்வேறு பிரதேசங்களில் பிரசித்தி பெறுவதற்கு காரணங்கள் அப்பிரதேசங்களில் ஏதேனும் ஒரு சிறப்பம்சம் காணப்படும் அவ்வாறு இப்பிரதேசத்தில் பளலுவெவயில் புகழ் வெளியூருக்குச் செல்வதென்றால் முதற்காரணம் கிரிக்கெட் ஆகத்தான் இருக்கும்.



பளலுவெவ என்றால் கிரிக்கெட் கிரிக்கெட் என்றால் பளலுவெவ என்று குறிப்பிட முடியும். இதுபோன்ற ஒரு சிறப்பம்சம் ஒன்றினை நான் கட்டுரை வடிவில் சமர்ப்பிக்கிறேன்.


பளலுவெவ ஊரின் கிரிக்கெட் வரலாறு ஆனது கிட்டத்தட்ட 34 வருடங்கள் பழமை வாய்ந்ததாகும். சரியாக 1986ஆம் ஆண்டு பளலுவெவயில் கிரிக்கெட் அறிமுகம் செய்யப்பட்டது. கிரிக்கெட் என்றால் பெயரளவில் மற்றும் இருந்த தருணத்தில் இவ்வூரில் கிரிக்கெட்டை அறிமுகம் செய்து வைத்தவர் அன்றைய கால பேராதனை பல்கலைக்கழக மாணவரும் இன்றைய அதிபருமான ஹனீபா அவர்கள் ஆவார்.

சாதாரணமாக 34 வருடங்கள் பழமை கொண்ட இவ்வூரின் கிரிக்கெட் வரலாறு
ஆரம்பத்தில் அணித் தலைவரின் கீழ் நடாத்திச் செல்லப்பட்டது. அன்றைய காலத்தில் al-hamra என்ற பெயரில் பளலுவெவ கிரிக்கெட் அணி செயற்பட்டது. ஆறு வருடங்களுக்குப் பின் அல் ஹம்ர என்ற பெயர் மாற்றப்பட்டு ரோலெக்ஸ் என்ற பெயர் வைக்கப்பட்டது. இப்பெயர் மாற்ற பின்னணியில் ஹனீபா ,ரமீஸ் ஆசிரியர்களின்  வகிபாகம் காணப்படுகிறது என்று பளலுவெவ கிரிக்கெட் உடன் தொடர்புடைய நபர்கள் அறிவித்திருந்தனர்.



Balaluwewa rolex





1986 ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கழகம் 1992இல் பெயர் மாற்றப்பட்டு ரோலெக்ஸ் கிரிக்கெட் கிளப் என பெயரளவில் பிரசித்திப் பெற்றிருந்தது.

அதன்பின் 2016ஆம் ஆண்டு சுமார் 24 வருடங்களின் பின் கிரிக்கெட் கிளப் என்று உத்தியோகப்பூர்வமாக  சமூக வலைத்தளத்தில் பதிவுசெய்யப்பட்ட கிரிக்கெட் கிளப் ஆக மாற்றம் பெற்றது. அதுவரை காலமும் இல்லாத நிர்வாக கட்டமைப்பு 2016 இன் பின் கழகத்துக்கு கொண்டுவரப்பட்டது.





Rolex cricket club


உண்மையில் நிர்வாகம் ஒன்று இருந்தால் அவையே வெற்றிக்கு பாதையை திறந்து கொடுக்கக்கூடிய சாதனமாக மாறும் அடிப்படையில் பளலுவெவ கிரிக்கெட் கிளப் 1986ம் ஆண்டிலிருந்து இன்றுவரை அணித் தலைவராகவும் கிரிக்கெட் கிளப்பின் தலைவராகவும் இருந்தவர்களின் பட்டியல்.
  • S.M.ஹனீபா (தற்போதைய அதிபர்)
  • S.H.ஸாலிஹீன் ஆசிரியர்
  • T.இக்பால் ஆசிரியர்
  • S.M.நில்பான்
  • f.அஸாம்
  • J.ரிஸ்வான்(இர்பான்)
  • L.பர்ஹான்
  • H.M.அஸ்கான்
  • S.ஸலாஹுதீன்
  • U.M.தாரிக்(சிபான்)
  • B.M.ரஸ்மிகான்
  • Y.L. பர்ஹான்
  • S.M.நிரோஸ்கான்
  • T.ரிஸ்வான் 
  • N.M.ரஸ்பிகான்
  • N.M.பஸாஹிர்
2016 நிர்வாக கட்டமைப்பின் பின் வருடாவருடம் ரொலக்ஸ் கிளப் தனக்கென்று  ஒரு தனி வழியில் தன்னை தயார்படுத்திக் கொண்டது. ஒவ்வொரு வருடமும் ரோலக்ஸ் சாம்பியன் டிராபி மற்றம் இந்தியாவில் பிரிமியர் லீக் பாணியில் விளையாடப்பட்ட கிரிக்கெட் பளலுவெவயிலும் முதன்முறையாக அதே சட்டதிட்டங்களுக்கு அமைவாக ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட வெளியூர் வீரர்கள் அழைக்கப்பட்டு நடாத்தியது மிகப்பெரிய சிறப்பம்சமாகவும் ஐபிஎல் போன்ற விளையாட்டு அமைப்பை அனுராதபுர பிரதேசத்தில் அறிமுகப்படுத்தியவர்கள் என்ற சாதனையையும் ரோலக்ஸ் கிரிக்கெட் கிளப்புக்கு சாரும்.

ரோலெக்ஸ் கிரிக்கெட் கிளப் நடாத்திய போட்டித் தொடர்கள் 
  • 2016இல் பளலுவெவ மைதானத்தில் நடைபெற்ற சாம்பியன் டிராபி கிண்ணத்தை குறிப்பிடலாம்( season 1)
  • மீண்டும் அடுத்த வருடம் 2017இல் ரோலக்ஸ்  சாம்பியன் டிராபி நடைபெற்றது season 2
  • அதனைத் தொடர்ந்து முதன்முறையாக அனுராதபுர வரலாற்றில் ஐபிஎல் முறையில் BRPL பளலுவெவ ரோலெக்ஸ் பிரீமியர் லீக் நடைபெற்றது. Season 1
  • மீண்டும் 2018 ஆம் ஆண்டு ரொலக்ஸ் சம்பியன் டிராபி நடைபெறல்.season 3
  • அதே வருடத்தில் பி ஆர் பி எல் நடைபெற்றது. Season 2
  • மீண்டும் 2019 ஆம் ஆண்டு பி ஆர் பி எல் நடைபெற்றது.  Season 3
இதேபோல் அடுத்த வருடமும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரொலக்ஸ் சாம்பியன் டிராபி நடைபெற உள்ளது என்பதும் மற்றும் பி ஆர் பி எல் season 4 ஐந்தாம் மாதம் அல்லது ஆறாம் மாதங்களில் 2020ஆம் ஆண்டு நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



Sacrifice


ரோலெக்ஸ் கிரிக்கெட் கிளப் சாதாரணமாக பாடசாலை மைதானத்தில் தனது கிரிக்கெட் பயணத்தை ஆரம்பித்து தனக்கென்று ஒரு மைதானத்தை ஊர்மக்களின் ஆதரவின் கீழ் அமைத்தது. இப் பிரதேசங்களில் காணப்படும் சிறந்த மைதானமாக வட்ட வடிவ அமைப்பில் காட்சி அளிக்கக்கூடியதாக காணப்படுகிறது. உண்மையில் கிரிக்கெட் வரலாற்றிற்கு ஒரு சிறப்பான ஊராக பளலுவெவ ஊர் திகழ்வது என்பது உண்மையாகும்.

இவ் மைதானம் 36 நபர்களின் காணிகள் பள்ளிக்கு  வக்ஃப் செய்யப்பட்டு வழங்கப்பட்டதன் மூலம்இன்று இளைஞர்களுக்கு கிடைக்கப்பெற்றதும் ஒரு முக்கிய விடயமாகும். இம் மைதானத்தை பெற்றுத் தருவதற்காக அன்றைய காலத்தில் மஸ்ஜித் நிர்வாகம் இளைய தலைமுறையோடு இணைந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்திலிருந்து இன்றுவரை இவ்வாறு வளர்ச்சி பெற காரணம் அன்றிலிருந்து இன்றுவரை கிரிக்கெட் கிளப்புடன் இணைந்து அதனுடன் பணியாற்றும் இளைஞர்களும் கிரிக்கெட் நலன் விரும்பிகளும் மற்றும் பளலுவெவ ஊர்மக்களின் ஒற்றுமை எனக் குறிப்பிடலாம்.

கிரிக்கெட் கிளப்புக்கு ஊர் மக்களின் ஆதரவு மற்றும் அன்றி அரசியல்வாதிகளின் ஆதரவு கிடைக்கப் பெற்றமை சிறப்பம்சமாக நோக்கப்படுகிறது.

மைதான உருவாக்கத்திற்காக கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் இஷாக் ரஹ்மான் அவர்கள் தம்மால் இயன்ற மிகப்பெரும் பங்களிப்பினை செய்துள்ளார். மற்றும் மைதானத்தில் மேடை அமைப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சந்திம கமகே அவர்களும் பிரதேச சபை உறுப்பினராக காணப்படும் ஹபீஸ் அவர்களும் உதவிகள் செய்தமை குறிப்பிடத்தக்கதாகும். இன்னும் அரசியல்வாதிகள் பலர் இவ்வூரின் கிரிக்கெட் வளர்ச்சிக்காக தங்களால் இயன்ற பங்களிப்பினை செய்தது குறிப்பிடத்தக்கது.

மற்றும் பளலுவெவ ஊர் சார்ந்து செயற்படும் சங்கங்கள் பலவும் இதற்கான பங்களிப்பினை செய்துள்ளது.



  • Cwa
  • Qatar rolex
  • Qbs
  • Kbs
  • Esda

 உண்மையில் தனிமனிதர்கள் பலர் இக்கழகத்துக்காக பல்வேறு உதவிகளை செய்துள்ளனர்.உடல் ரீதியாகவும் பணம் ரீதியாகவும் பல்வேறு உதவிகள் ஒவ்வொரு தனி நபர் மூலமும் செய்யப்பட்டது சிறப்பம்சம் ஆகும்.

பளலுவெவ ஊர் மக்களின் ஒற்றுமையை தெளிவாக முறையில் குறிப்பிடுவதானால் ஏதேனும் ஒரு தேவை ஏற்படும் போது அவற்றை தம் மக்களின் உதவியுடன் பொருளாகவோ பணமாகவோ விரைவில் சேகரித்து முடிப்பர்.இதுவே ஒற்றுமையின் சின்னமாக பளலுவெவ ஊர் ரொலக்ல் கிரிக்கெட் கிளப் நோக்கப்படுகிறது.இவற்றில் தனி நபர்கள் பெயர்கள் குறிப்பிடவில்லை. காரணமாக குறிப்பிடுவதனால் நூற்றுக்கணக்கான பெயர்கள் குறிப்பிட வேண்டும் என்ற ஒரே ஒரு காரணத்தால் மாத்திரமே ஆகும்.

மீண்டும் ரோலெக்ஸ் கிரிக்கெட் கிளப்பின் சாதனைகளோடு அதாவது சேம்பியன் லீக் கிரிக்கெட் போட்டி தொடர் , பி ஆர் பி எல் போட்டித்தொடர் மற்றும் அக்கழகம் பெற்றுள்ள வெற்றிகளையும் பற்றி அடுத்த தொடரில் ஆராயலாம்.


தொடரும்.........


மீண்டும் இதனூடன் சம்மந்தப்பட்ட விடயங்கள் ஏதேனும் இருப்பின் தொடர்பு கொள்ளவும்.



Contact number. 0766671719

E.mail: naleefrf@gmail.com
Whats app number : 0766671719

Naleef
Eastern University


Comments

Popular posts from this blog

பாடசாலை வழிகாட்டல் ஆலோசனை சேவை தொடர்பான தொகுப்பு(மட்டக்களப்பு முதலைக்குடா மத்திய மகா வித்தியாலயம்

போட்டி பரீட்சை நுண்ணறிவு வினாக்கள்