பல்கலைக்கழக பகிடிவதை சம்பந்தமாக சில குறிப்புகள்.




பல்கலைக்கழகம் வந்தோம் படித்து விட்டு சென்றோம் என்று காலம் மீறி பல்கலைக்கழகம் செல்வோம் University registration ஐ இழப்போம் என்பது இன்று trend ஆகிவிட்டது.நடக்கும் நடப்புக்கள் ராகிங் என்ற பெயரில் தன் எதிர்கால வாழ்க்கையை நாசமாக்கும் நிகழ்வுகள் உருவாகியுள்ளது.



எதிர்கால வைத்தியர்கள் எதிர்கால ஆசிரியர்கள் எதிர்கால இன்ஜினியர்கள் தம் சொந்த செலவிலே தமக்கே ஆப்பு வைத்து கொண்டு ராகிங் என்ற பெயரில் தம் படிப்பை இழந்து செல்கின்றனர்.



பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் பகிடிவதைகள் தான் என்ன? ஏன்  அவை காட்டுமிரான்டிகளை விடவும் கொடூரமான முறையில் தாக்கப்படுகின்றனர்.ஒரு மாணவன் தற்கொலை செய்யும் அளவிற்கு ராகிங் நடைபெறுவது தடுக்கப்பட வேண்டிய விடயமாகும்.






பகிடிவதை தடுக்க பட வேண்டும் என்பது எல்லா மாணவர்களினதும் ஒர் எண்ணம் தான் . ஆரம்பத்தில் பல்வேறு கனவுகளோடு பல்கலைக்கழகத்தில் கால் வைத்தால் தனது உயிர் இழந்த உடல் மட்டும் வீட்டிற்கு செல்வது தம்மை வளர்த்த பெற்றோருக்கும் பேரிடி தான்.இது போன்ற பகிடிவதைகள் முழுமையாக தவிர்கப்பட வேண்டும்.


உண்மையில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2020.1.20 நடைபெற்ற ஊடகங்களால் கூறப்படும் வைத்தியசாலையில் அனுமதித்த மாணவன் கூறும் விடயங்களில் உள்ள உண்மை என்ன என்று அறியமலே பல்வேறு ஊடகங்கள் பல்வேறு கதைகளை பரப்புவது கண்டிக்க தக்க விடயமாகும்.

உண்மையில் நடைபெற்றது என்ன ? ஒரு வீடியோ கிடைத்தது விட்டது என பல்வேறு ஊடகங்களும் பல்வேறு கதைகளை பரிகாசம் செய்வது சரியா.இது தான் ஒரு வேளை ஊடக சுதந்திரம் ஆகுமா?????????


கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2020.01.20 திகதி நடைபெற்ற பிரச்சினையின் பின்புலம் என்ன என்பது பற்றி யாராவது விசாரணை செய்தது உண்டா .நீதி நியாயம் இரு பக்கத்தையும் சாரும் அடிபட்ட மாணவன் எதற்காக அடிபட்டான் ?அடித்த மாணவர்கள் எதற்காக அடித்தார்கள் என்ற விடயம் எல்லாம் ஊடகங்களுக்கு எவ்வாறு தெரியும்.


உண்மையில் நடந்த விடயம் என்ன .தன் பிரதேசவாத்தை பல்கலைக்கழகத்தில் காட்ட பல்கலைக்கழக அருகில் உள்ள மாணவர்களுக்கும் தூர பிரதேச மாணவர்களுக்குமிடையே நடைபெற்ற கைகலப்பை  தான் இந்த சம்பவம் ஆகும்.உண்மையில் தூர பிரதேச ரீதியாக வரும் மாணவர்கள் பல்கலைக்கழக பக்கத்தில் உள்ள மாணவர்கள் அடக்கியாள கூடியவர்களா என்ற எண்ணம் எல்லா பல்கலைக்கழகங்களிலும் நிகழ்கின்றது.ஏதும் பல்கலைக்கழக அருகில் உள்ள மாணவர்கள்  சிறியதோர் பிரச்சினை ஏற்பட்டாலும் அவர்கள் தங்கள் பிரதேச இளைஞர்களை பல்கலைக்கழகத்தினுல் கொண்டு வந்து பிரச்சினைகள் படும் அளவிற்கு இன்று சென்றுள்ளது.இதுவே இன்று நடைபெற்ற ஊடகங்களால் கூறப்படும் பகிடிவதையும் பல்கலைக்கழக மாணவர்களால் கூறப்படும் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கை கலப்பு என கூறலாம்.


இவ்வாறான சண்டை சம்பவங்கள் பல்கலைக்கழக தடுக்கப்பட வேண்டியவை முற்றிலும் இல்லாதொழிக்க பட வேண்டிய விடயமாகும்.

எனினும் ஆரம்பத்தில் முதலாம் வருட மாணவர்கள் ஏன் ஒரே மாதிரியான ஆடைகள் அணிந்து வருகின்றனர்.எதற்காக அவர்கள் சிரேஸ்ட மாணவர்களுக்கு சிரம் தாழ்த்தி செல்கின்றனர் எல்லாம் தான் மாணவர்கள் மீறும் வேளை தான் பல்கலைக்கழகத்தில் பகிடிவதை ஆரம்பிக்கிறது.

ஒரே ஆடை எதற்காக பல்கலைக்கழகத்தில் நுளையும் பல்வேறு மாணவர்கள் சிலர் ஏழைகளாகவும் சிலர் பணம் படைதவர்களாகவும் இருப்பர் இவர்கள் இடையே சமத்துவத்தை உண்டு பன்னவே இது போன்ற ஆடைகள் அணிந்து கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.

எது எவ்வாறாயினும் பல்கலைக்கழகத்தில் பகிடிவதை முற்றிலும் இல்லாதொழிக்க பட வேண்டும்.ஆயினும் பல்கலைக்கழக பிரதேசங்களில் நடைபெறும் விடயம் சார்பாக ஊடகங்கள் ஒன்றுக்கு இரு தடவைகள் பல்வேறு தரப்பினரிடையே விசாரணை செய்வது ஊடகங்களுடைய அத்தியாவசிய விடயமாகும்.



பல்கலைக்கழக பகிடிவதையை மக்களுக்கு எடுத்துச் சென்ற ஊடகங்களுக்கு நன்றி எனினும் பல்கலைக்கழகத்தில் இன்னும் ஆயிரமாயிரம் பிரச்சினைகள் நடைபெற்ற போதெல்லாம் எங்கே சென்றது இவ் ஊடகங்கள் என்பதே எனது கேள்வி ?


எனவே பகிடிவதையை ஒழிப்போம் என்பது என் எண்ணம் தான்.ஆனால் எந்த சம்பவங்களையும் இரு தரப்பினிடையும் விசாரித்து தம் தகவல்கள் பகிருமாரு கேட்டுக் கொள்கிறோம்.

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் சார்பாக

Comments

Popular posts from this blog

பாடசாலை வழிகாட்டல் ஆலோசனை சேவை தொடர்பான தொகுப்பு(மட்டக்களப்பு முதலைக்குடா மத்திய மகா வித்தியாலயம்

போட்டி பரீட்சை நுண்ணறிவு வினாக்கள்