இரு குருடர்களின் காதல் காவியம்

தேவதை பிறப்பாளா?

காற்று பலமாக அடிக்கிறது மரங்களின் கிளைகள் கூட உடைந்து விடும் அளவுக்கு காற்று அடிக்கிறது அதே வேகத்தில் மழைத்துளிகள் கூரை மீது விழ  மழை பெரிய சத்தத்துடன் பெய்து கொண்டிருக்கிறது. இச்சூழ்நிலையில் சர்மிலன் வீட்டில் மனைவியுடன் ஒன்றாய் கூடி நின்று மழையின் அகோரத்தை ரசித்தவண்ணம் கதைத்துக் கொண்டிருந்தான். சர்மிலனை பொறுத்தவரை மிகப் பெரிய பணக்காரன் அறிவில் சிறந்தவன் பீலன் நகருக்கு வரும் போது வெறும் கையுடன் தான் வருகை தந்தான் எனினும் இன்று மிகப் பெரிய பணக்காரன் என்றால் அது அவனின் புத்திசாலித்தனமும் விவேகமும் எனக் கூறலாம்.


அவளின் மனைவி மிகப்பெரிய அழகி அவளது நடையும் உடையும் நளினமும் உடல் அசைவுகளும் அவளை அழகியாக்கியது. அழகென்றால் வெள்ளையா தான் இருக்க வேண்டுமா பொது நிறமாக இருந்தாலும் அது அழகு தான் என்பதற்கு இவள் ஒரு சாட்சி.


உரத்த மழையின் முன் கணவனும் மனைவியும் ரசித்த நின்றிருக்க தன் கணவன் அவளைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். மஞ்சள் நிறப்புடவை விரித்த கூந்தல் காற்றில் அங்குமிங்கும் அசைவதும் தோடுகள் காற்றுடன் இசைபாட அவன் உதடுகள் சிரித்த நிலையில் கோவைப்பழம் போல் காட்சிதர பெய்யும் மழையை மறந்து அவளை ரசித்துக் கொண்டிருந்தான் சர்மிலன்.


திடீரென இடியுடன் ஒரு மின்னல் தாக்க சரவணனின் மனைவி கத்திக்கொண்டே தனது கணவனை கட்டிப் பிடிக்கிறாள் .கணவனும் இதுதான் நேரம் என அவளை அரவணைத்து கொள்கிறான். சிறு நேரத்தின் பின் அவளை சர்மிலன் கட்டிலில் கொண்டு சென்று அமரச்செய்து அவள் வயிற்றில் கை வைக்கிறான். கை வைத்து தடவும் வேளை மனைவி என்னங்க உங்க பிள்ளைய பார்க்கணும் போல இருக்கா எனக்கேட்க இல்லாமையா என் அழகு தேவதை பெற்றுத்தரும் என் செல்லத்தை பார்க்க என் கண்கள் இரண்டும் துடிக்கிறது. அடி அதனை கையில் கொஞ்சும் வேளை அது என் மடியில் சிறுநீர் கழிக்கும் வேளை என் நேரமும் அதன் அழுகை குரல் என அனைத்தையும் ரசித்த ஏங்கிக் கொண்டிருக்கிறேனடி. என அவளிடம் கூற அவள் மனைவி முகத்தை சுளித்துக் கொள்கிறாள்.


அதைப் பார்த்ததும் அவன் ஏனடி முகத்தை சுழிக்கிறாய் எனக்கேட்க.குழந்தை வரும் முன்னே இவ்வளவு எதிர்பார்ப்பு என்றால் ஆசை என்றால் குழந்தை பிறந்தவுடன் என்னையும் கணக்கெடுக்காமல் எனக்கென நேரம் செலவழிக்காமல் போய் விடுவாயோ என கவலைப்படுகிறேன் எனக் கூறினால்.அதற்கு அவன் என் முதல் குழந்தையே நீதானடி என அவளை செல்லமாக அணைத்துக் கொள்கிறான். உண்மையில் சர்மிலன் அவனது மனைவியும் அனாதைகள் என்பதே இதன் உண்மை.

இவர்கள் இருவரும் தன் குழந்தை மூலமாக அவர்களுக்கு ஒரு துணையைத் தேடிக் கொள்கிறார்கள் என்பதே இதன் வெளிப்பாடாக உள்ளது. மழையுடன் காற்று வேகமாக வீச பீலன் என்ற ஊரும் அதைச் சார்ந்த பகுதிகளும் மழையினால் மழை நீரினால் வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது.

இந்த வேளை மனைவிக்கு வலி ஏற்பட அவளை வைத்தியசாலை கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது வெளியில் வெள்ளம் எவ்வாறு கொண்டு செல்வது என கேள்வி ஒரு பக்கம் இருக்க அவள் வலியால் துடித்துக் கொண்டிருப்பதை பார்க்க முடியாமல் அவள் ஐயோ அம்மா என்று கத்திக்கொண்டு இருப்பதை கேட்க முடியாமல் அவளை கையில் ஏந்திக்கொண்டு காருக்கு அழைத்துச் செல்கிறான் சர்மிலன்.


காரில் சென்று கொண்டிருக்கும் வேலை அதிக மழை காரணமாக ஒரு நிலைக்கு மேல் செல்ல முடியவில்லை என்ன செய்வது இன்னும் வைத்தியசாலைக்குச் செல்ல ஒரு கிலோமீட்டர் மீதம் இருக்க அதனை எவ்வாறு கொண்டு சேர்க்கவண்டும் என அவளை இரு கைகளில் ஏந்தியவாறு கொண்டு செல்கிறான் சர்மிலன். அவளது உடல் நணைந்தாலும் அவளை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற முனைப்பில் அவளை கையில் ஏந்தியவாறு தூக்கிச் செல்கிறான். இவளைத் தூக்கிச் செல்லும் போகும் வழியில் ஒரு ஆற்றுப் பாலத்தைக் கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது ஒருவாராக சர்மிலன் மனைவியை வைத்தியசாலைக்கு கொண்டு சேர்க்க உடனடியாக பிரசவம் பார்க்கப்படுகின்றது.


இச்சம்பவம் நடந்து கொண்டிருக்கும் ஐந்து நிமிடங்களுக்கு முன் சர்மிலன் தன் மனைவி ஏந்திக் கொண்டு  ஆற்றை தாண்டிச்செல்லும் போகும் போது மனைவியை கரையில் கொண்டுவிட்டு ஏறும் போது அவனது கால்கள் தடுக்கி நீருக்குள்  விழ அவன் நீரினால் அடித்துச் செல்லப்படுகிறான்.


சிடிவேசன் song  உயிரே உயிரே வந்து என்னோடு சேர்ந்து விடு

தேவதை பிறப்பிக்கப்படுவாள? தொடரும்............


சர்மிலன் மனைவியை எவ்வாறு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுகிறாள்.


அவளுக்கு எவ்வாறு பிரசவம் நடக்கிறது.


ஷர்மிலனின் உயிருக்கு ஏதாவது நடக்குமா? என அடுத்த பாகத்தில் பார்கலாம் .



அடுத்த பாகம்( தேவதை பிறப்பால்.)



Writer.Naleef
B.A.reading
Eastern University

Comments

Popular posts from this blog

பாடசாலை வழிகாட்டல் ஆலோசனை சேவை தொடர்பான தொகுப்பு(மட்டக்களப்பு முதலைக்குடா மத்திய மகா வித்தியாலயம்

போட்டி பரீட்சை நுண்ணறிவு வினாக்கள்