பாடசாலை வழிகாட்டல் ஆலோசனை சேவை அதிபர் ஆசிரியர்கள் மற்றும் ஆலோசகர்களின் செயற்பாடுகள் அல்லது பணிகள்.

பாடசாலை வழிகாட்டல் ஆலோசனை சேவை அதிபர் ஆசிரியர்கள் மற்றும் ஆலோசகர்களின் செயற்பாடுகள் அல்லது பணிகள்.



பாடசாலை மட்டத்தில் அமைக்கப்படுகின்ற வழிகாட்டல் ஆலோசனை சேவை தொடர்பாக முக்கியமாக பங்காற்ற வேண்டிய அணியினர் ஆக அதிபர் ஆசிரியர்கள் ஆலோசகர்கள் காணப்படுகின்றனர். இவர்களுக்கென வழிகாட்டல் சேவை தொடர்பாக பல செயற்பாடுகள் காணப்படுகின்றன. அவற்றை பொருத்தமாக நிறைவேற்றுவதன் ஊடாகவே வெற்றிகரமான வழிகாட்டல் ஆலோசனை சேவையை முன்னெடுக்க முடியும் இந்த அடிப்படையில் அதிபர் ஆசிரியர்கள் ஆலோசகர்களின் பணிகள் என வகைப்படுத்த முடியும்.


இதன் அடிப்படையில் மாணவன் ஆசிரியர் அதிபர் ஆலோசகர்கள் போன்றோர் இவ் வழிகாட்டல் ஆலோசனை சேவை இன் கீழ் தொடர்புருகின்றனர். இச்சேவை ஒரு மாணவனை நேரடியாக இனங்காண்பதனூடாக செயற்பாடுகள் ஆரம்பமாகி ஆலோசனைகள் நடைபெறும் என்பது முக்கியமான விடயமாகும். முதன்மையாக மாணவன் கண்டுபிடிக்கப்பட்டு அதாவது ஒரு அதிபர் ஊடாகவோ அல்லது ஒரு ஆசிரியர் ஊடாகவோ பிடிக்கப்பட்டு கடைசியில் ஆலோசகரின் கையில் அம்மாணவன் விடப்படுகிறான். அவனது பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து அம்மாணவனின் உள ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் நெறிமுறை படுத்தும்போது மாணவன் சிறந்த நடைமுறைகளை கற்றுக்கொள்ளும் நிலை உருவாகிறது. இதுபோன்று செயற்பாடுகளே பாடசாலை வழிகாட்டல் சேவையின் போது நடைபெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.



இவற்றில் அதிபர் பணி ஆசிரியர்களின் பணி ஆலோசகர்களின் பணி என மூ வகையாக நோக்க முடியும்.

பாடசாலை வழிகாட்டல் ஆலோசனை சேவை அதிபர் ஆசிரியர்கள் மற்றும் ஆலோசகர்களின் செயற்பாடுகள் அல்லது பணிகள்.




முதன்மையாக நாம் அதிபரின் பணியை நோக்குவோம்.



ஃ. பாடசாலையின் அனைத்துக்கும்  தலைவராக பணிப்பாளராக இணைப்பாளராக இருப்பதனால் வழிகாட்டல் சேவையின் முழுப்பொறுப்பும் இவரே சாரும். அதாவது பாடசாலை பணிகளை மேற்கொள்ளும் பொழுது ஒவ்வொரு விடயமும் அதிபரின் ஊடாக ஆசிரியர்களுக்கு மற்றும் மாணவர்களுக்கு செயற்பாடுகள் இடம் பெறுவதனால் அதிபரே அச் செயற்பாடுகளுக்கு பொறுப்பானவர் ஆவார் ஆகவே அதிபர் முழுப்பொறுப்பு உடையவராக இருக்கிறார்.

ஃ. இவ்வாறு முழுப்பொறுப்பு உடையவராக காணப்பட்டதன் பின் பாடசாலை வழிகாட்டல் சேவையின் ஒரு சிறந்த அல்லது பொருத்தமான ஆலோசகர் ஒருவரை தெரிவு செய்து நியமிக்கும் பொறுப்பு அதிபரயே சாரும். ஒரு பாடசாலையில் பல ஆலோசகர்கள் காணப்படுமிடத்து ஒரு சிறந்த ஒரு பொருத்தமான ஆலோசகரை தெரிவு செய்வதும் அல்லது ஆலோசகர் இல்லாதவிடத்து ஒரு ஆசிரியரை ஆலோசகராக தெரிவு செய்வதும் அதிபரின் முக்கிய பொறுப்பாக நோக்கலாம்.

ஃ. ஆலோசகர் ஒருவரை தெரிவு செய்ததன் பின் வழிகாட்டல் சேவைக்கான தனியான ஒரு அமைப்பு ஒன்றை அல்லது குழு 1 அமைத்தல் முக்கியமான  கடமையாகும். அதாவது வழிகாட்டல் சேவைக்கு என்று தலைவராக அதிபர் செயற்படும்போது அதற்கான செயலாளர் பொருளாளர் மதிப்பீட்டாளர் போன்ற ஒரு குழுவை நியமிப்பது அதிபரின் கடமையாகும்.


ஃ. ஒரு வழிகாட்டல் ஆலோசனை குழு ஒன்றை நியமித்ததன் பின் அச் சேவையில் ஈடுபட்டவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல் வேண்டும். அதாவது ஆலோசனை செய்வதற்கான இடம் அதற்குத் தேவையான பொருட்கள் அதற்கு தேவையான வளங்கள் அதற்குத் தேவையான சூழல் அமைப்பு அதற்குத் தேவையான ஆசிரியர் வளம் அதற்குத் தேவையான சமூக வளம் போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுப்பது அதிபரின் செயற்பாடாகும்.

ஃ. மேலும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து அதன்பின் அச் சேவையை திட்டமிட்டுவதற்கான உதவிகளை செய்து கொடுத்தல் வேண்டும். அதாவது உடல் ரீதியாகவோ அல்லது பொருள் ரீதியாகவோ அதிபர் உதவிகளை வழங்குவது இன்றியமையாத செயற்பாடாகும்.

ஃ.‌ மேலும் வழிகாட்டல் சேவை செயற்பாட்டாளர்களின் சேவைகளையும் ஆற்றல்களையும் மதிப்பிட்டு அவர்களுக்கான தரங்களை பிரித்து அவர்களைச் செயற்பட செய்தல் வேண்டும்.

ஃ. வழிகாட்டல் சேவையின் ஊடாக சமூகத்தில் உள்ள பல்வேறு பிரிவினரும் பயன்பாடு அடையும் வகையில் சமூக ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ள வேண்டும். சமூக ஒத்துழைப்பு என்பது வழிகாட்டல் சேவையின் போது சமூகம் தனது மக்கள் மாணவர்கள் பிள்ளைகள் இவர்களுக்கு தேவைப்படும் ஆலோசனைகளை பெற்று இவர்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்படும்போது அவற்றை தீர்க்க வழிகாட்டல் சேவை உதவி செய்தல் வேண்டும் இதற்காக அதிபர் செயற்பாடுகளை முன்னெடுப்பது இதன் நோக்கமாகும்.


ஃ. வழிகாட்டல் ஆலோசகர்களுக்கு வழிகாட்டல் சேவை தொடர்பான கருத்தரங்குகள் பாடநெறிகள் சமூக ஊடக செயற்றிட்டங்கள் மற்றும் காணொளிகள் போன்றவற்றை கண்காணித்து அவற்றில் ஈடுபற்றும் அவர்களுக்கான தெளிவையும் நோக்கங்களையும் தெளிவுபடுத்தி அவர்களுக்கு ஊக்கத்தை வழங்குதல் மிக முக்கிய செயற்பாடாக நாம் நோக்கலாம்.


ஃ. பாடசாலையில் இடம்பெறும் வழிகாட்டல் சேவை தொடர்பாக போதிய தகவல்களை அதிபர் பெற்றோர்களுக்கு வழங்கி அதனூடாக பெற்றோர்களின் பிள்ளைகள் அல்லது மாணவர்கள் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்குரிய நடவடிக்கையை அதிபர் எடுத்தல் வேண்டும்.

ஃ. காலங்கள் நேரங்கள் மாற்றம் அடையும்போது நவீன உலக பிரச்சினைகள் உலகை ஆட்கொள்ளும் போது அதற்கு ஏற்றாற்போல் புதிய திட்டங்கள் கொள்கைகள் மாற்றங்கள் போன்றவற்றை ஏற்படுத்தி வழிகாட்டல் ஆலோசனை சேவை மேம்படுத்துதல் அவசியமாகும்.


ஃ. வழிகாட்டல் ஆலோசனை சேவையின் ஊடாக பயன் பெறும் மாணவர்கள் தொடர்பில் ஒரு முழுமையான அறிக்கையை வெளிப்படுத்துவதன் ஊடாக வழிகாட்டல் ஆலோசனை சேவை பெறுமதியை சமூகத்துக்கு காட்ட முடியும் என்பதால் அதிபர் அச்செயற்பாட்டை செய்தல் வேண்டும்.

ஆசிரியர்களின் பணிகள்


ஃ. மாணவர்களின் தகவல்களை திரட்டி அவை தொடர்பாக முழுமையான தகவல்களை பதிவுகளை பெறுவதன் ஊடாக அவற்றை பாதுகாத்து வைப்பது ஆசிரியரின் மிக முக்கிய பணியாக காணப்படுகிறது.

ஃ. பல்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகளை மாணவர்கள் எதிர்நோக்க கூடியவராக இருக்கின்றனர். அவ்வாறான சூழ்நிலைகளை அவதானித்து மாணவர்களை ஆசிரியர் எப்பொழுதும் தன் அவதானம் மூலம் அவர்களின் செயற்பாடுகளை அவதானிப்பது ஆசிரியரின் முக்கிய கடமையாகும். உதாரணமாக

மாணவர் செயற்படும் வகுப்பறை
விளையாட்டுச் செயற்பாடுகளில் ஈடுபடும் மைதானம்
கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடும் நூலகம் மற்றும் கணினி அறைகள் நவீன விஞ்ஞான ஆய்வு கூடங்கள் போன்றவற்றில் மாணவர்களை அவதானித்தல்.


ஃ. பொருத்தப்பாடு அற்ற மாணவர்களை பொருத்தமாக மாற்றுவதற்கான வழி வகைகளை மேற்கொள்வது அவசியமாகும். இவ்விடயத்தில் பொருத்தப்பாடு காணப்படுகிறார்கள் என்பதை அவதானித்து அதனூடாக அவர்களே பொருத்தப்பாடு உள்ளவர்களாக மாற்றுவது முடியுமான காரியமாகும்.
உதாரணமாக.

கல்விச் செயற்பாட்டில் திறமை இருந்தும் பின்தங்கியிருக்கும் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஊக்கம் அளிப்பதன் மூலம் அல்லது பரிசுகளை அளிப்பதன் மூலம் அவர்களே முன்னிலைக்கு கொண்டுவர முடியும்.

ஃ‌. மாணவர்களை பல்வேறு வழிகளில் பொருத்தப்பாடு உடையவர்களாக மாற்றுவதற்கு தெளிவுபடுத்தல்களை மேற்கொள்ளுதல் வேண்டும். அதாவது சமூகம் கல்வி தனியாள் மற்றும் பொருளாதார தொழில் வழிகாட்டல்கள் போன்றவற்றை தெளிவு படுத்துவதே இதன் நோக்கமாகும்.

ஃ. மாணவர்கள் தமது சுய விருத்தி தொடர்பாக மதிப்பீடுகளை செய்வதற்கு வசதிகளை ஆசிரியர் செய்து கொடுப்பது மிக முக்கிய கடமையாகும். தாம் ஒரு நிலையில் இருந்து மற்றைய நிலைக்கு மாற்றமடைகின்றனரா என்பதை சோதிப்பதற்கு அல்லது கீழிருந்து மேல் நோக்கி அல்லது மேலிருந்து கீழ்நோக்கி வருகின்றனரா என்பதை மதிப்பிடுவதற்கு ஆசிரியர் உதவிகளை செய்தல் வேண்டும்.


ஆலோசகர்களின் செயற்பாடுகள்.



ஆலோசனை வழிகாட்டல் சேவை தொடர்பான விழிப்புணர்வுகளை சமூகத்தில் பாடசாலைகளில் உட்படுத்தல்.


மாணவர்கள் பிரச்சினை தொடர்பாக பகுதி பகுதிகளாக பிரித்து அவர்களது பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றுக்கான தீர்வுகளை வழங்குதல்.

ஒரு மாணவர்களிடம் காணப்படும் தனிப்பட்ட ஆற்றல்கள் திறமைகள் விருப்பங்கள் நற்குணங்கள்  தீய செயற்பாடுகள் அனைத்தையும் கண்டறிந்து அவர்களை விளங்கிக் கொள்ளுதல் வேண்டும்.


மாணவர்களின் மனவெழுச்சி தொடர்பான பிரச்சினைகளை கண்டு பொருத்தமான தீர்வுகளை அல்லது பொருத்த பாட்டினை ஏற்படுத்துவது அவசியமாகும்.


ஆலோசனை செயற்பாடுகளில் ஈடுபடும் பிள்ளைகள் தொடர்பான அறிக்கைகளை அதிபர் ஆசிரியர் பெற்றோர் போன்றவர்களுக்கு வழங்குதல் மிக முக்கிய கடமையாகும்.

வழிகாட்டல் ஆலோசனை சேவை தொடர்பாக செயற்பாடுகளில் ஈடுபட்டு ஆய்வறிக்கைகள் சேமித்து வைத்தல் வேண்டும்.

ஆலோசனை சேவை செயற்பாடுகள் வெற்றி பெற பாடசாலையில் தாண்டி நிறுவனங்கள் வெளி அமைப்புகள் தனி உரிமை பெற்ற அமைப்புகள் குழுக்கள் போன்றவற்றுடன் தொடர்புகளை ஏற்படுத்துவது அவசியமாகும்.


ஆகவே வழிகாட்டல் ஆலோசனை சேவை இன் போதும் அதிபர் ஆசிரியர்கள் மற்றும் ஆலோசகர்களின் பணிகள் இன்றியமையாததாக காணப்படுவது மிகவும் மறுக்க முடியாத உண்மையாகும்.




Comments

Popular posts from this blog

பாடசாலை வழிகாட்டல் ஆலோசனை சேவை தொடர்பான தொகுப்பு(மட்டக்களப்பு முதலைக்குடா மத்திய மகா வித்தியாலயம்

போட்டி பரீட்சை நுண்ணறிவு வினாக்கள்