Easy earnings online job (blogger)Blogger மூலம் இலகுவான முறையில் onlineல் சம்பாதிக்கும் வழிகள்ஃ

 Easy earnings online job( இலகுவான முறையில் online சம்பாதிக்கும் வழிகள்.)



Blogger மூலம் இலகுவான முறையில் onlineல் சம்பாதிக்கும் வழிகள்ஃ
crossorigin="anonymous">

Note( எல்லோரும் செய்ய முடியும்)

பட்டதாரிகள் பட்டம் பெற்று பல வருடங்கள் கழிந்தும் தாம் ஒரு பட்டதாரி என்ற நிலையை சமூகத்துக்கு எடுத்துக் காட்ட முடியாத ஒரு சூழ்நிலையில் இருக்கிறார்கள். உண்மையைக் கூறப்போனால் தமது பாடசாலைக் கல்வியை பாதியிலேயே நிறுத்திவிட்டு வெளிநாடுகள் சென்று உழைக்கும் ஒரு சமூகத்திற்கு கீழ் வெட்கப்பட்டு வேதனைப்பட்டு துன்பப்படும் ஒரு வர்க்கமாக இவ்வேளையில்லா பட்டதாரிகள் தங்கள் நேரத்தையும் காலத்தையும் கழித்துக் கொண்டிருப்பது மிகவும் வேதனை தரக்கூடிய உண்மையாக காணப்படுகிறது.

இவ்வாறான பட்டதாரிகள் தம் நிலையை சமூகத்துக்கு எடுத்துக்காட்ட ஒரு சிறந்த தளமாக blogger இதை பயன்படுத்த முடியும். ஒரு பட்டதாரி தம் நிலையை எவ்வாறு காணப்படுகிறது என்பதை தனது திறமை எவ்வாறு வெளிப்படுகிறது என்பதை இந்த தளத்தின் மூலம் வெளிப்படுத்துவதனாள் அவர்கள் தங்களை Google என்ற இணையதளத்தில் பதிவு செய்கின்றனர். இச்செயற்பாடு காலாகாலத்திற்கும் பொருந்தக் கூடியதாக கல்லில் எழுதப்பட்டது போல் நிலையான ஒரு விடயமாக காணப்படுகிறது.


அது மட்டுமின்றி blogger இல் தம் கட்டுரை கவிதை மற்றும் பிற ஆக்கங்கள் இடுவதன் மூலம் Google என்ற இணைய தளம் உங்களுக்கு விளம்பரங்கள் மூலம் வருவாயை ஈட்டித் தரக்கூடிய ஒரு வழிவகை செய்துள்ளது.


பட்டம் பெற முன் பல்வேறு காலங்கள் வீட்டில் வேலையில்லா பட்டதாரியாக இருக்கும் போது தான் இந்த blogger தளத்தினை சரியாக பயன்படுத்தினால் காலம் முழுதும் வருவாய் ஈட்டும் ஒரு சிறந்த தளமாக எடுத்து நோக்க முடியும்.


வேலையில்லா நேரத்தை சிறந்த முறையில் கழிப்பதன் மூலம் ஒரு நிலையான வருமானத்தை இலகுவான வழியில் மீட்டுக் கொள்ள முடியுமா இருப்பதென்றால் அது blogger தளத்தின் மூலம் மட்டுமே பெறமுடியும் ஆக உள்ளது.

காலாகாலத்திற்கும் தங்கள் ஆக்கங்கள் நிலைநிறுத்தப்பட்ட தமது பெயர்கள் தமது முகவரிகள் நமது அடையாளங்கள் போன்ற அனைத்தும் Google என்ற இணையதளத்தில் நிலையாக நிறுத்தப்படுவது பெருமைக்குரிய விடயமாகும்.ஆகவே எவ்வாறு நாம் blogger தளத்தினை உருவாக்குவது என்பதனை நோக்கலாம்

  1. ஆரம்பமாக Google என்று இணைய தளத்துக்கு சென்று அங்கு blogger இன்று சர்ச் பண்ணும் பொழுது தேடிய blogger தளம் நமக்கு காட்சி தரும்.blogger .com இனை click செய்தல் வேண்டும்.

  1. அதில் உங்கள் gmail கொடுத்து login செய்துகொள்ளவும்.

  1. அதன் பின் New Blog இனை‌ click செய்யவும்.
  1. அடுத்து தோன்றும் பக்கத்தில் Title, Address, பெட்டியில் type செய்து கீழுள்ள  Template களில் ஒன்றை தேர்ந்தெடுக்கவும்.

  1. அனைத்தையும் சரியாக கொடுத்த பின் கடைசியில் உள்ள Create Blog இனை கொடுக்கவும்.

  1. இப்பொழுது உங்களது blogger தற்போது show ஆகும்.


 Blog Post பற்றி விபரம்

Blog post என்பது bloggers (நீங்கள்) எழுதும் கட்டுரைகள் அல்லது பதிவுகள் என குறிப்பிட முடியும் இதில்தான் கட்டுரை, கவிதை, picture, notes, videos(காணொளிகள்) என அனைத்தும் கலந்த ஒரு சுவையான செயற்பாடாக இருக்கும்.

(Restrictions) முக்கிய விடயம்

கட்டுரையில் அல்லது பதிவுகளில் இடம்பெற்றிருக்கும் விடயங்கள் ஏற்கனவே உள்ள websiteகளிலிருந்து copy செய்யப்பட்டதாக இருப்பது தடை செய்யப்பட்டுள்ளது. உங்களுக்கு சொந்தமான கட்டுரைகளாக அல்லது பதிவுகளாக Unique Content ஆக இருத்தல் வேண்டும். இல்லாதவிடத்து உங்கள் content copy right பிரச்சினைகளை உருவாக்கும்.

Blog post எழுதும் போது கவனிக்க வேண்டியவை: 

பிற websiteகளில், புத்தக்கங்களிலிருந்து இணைய தளத்திலிருந்து கட்டுரையை அல்லது பதிவுகள் எடுத்து அவற்றை மீண்டும் பதிவிடக்கூடாது(தடை செய்யப்பட்டுள்ளது)

 blog post எழுதும் முறை(write)

ஒரு  பூரண பதிவாக இருக்குமெனில் தலைப்பிலிருந்து(heading) ஆரம்பித்து, அதைப்பற்றி  விரிவான விளக்கங்கள் இடம்பெறுவது வேண்டும். தாான் சொந்த மொழி நடையில்(unique content) எழுத வேண்டும். Do not theft the content

இவற்றில் பதிவுக்கு தேவையான தொடர்புடைய picture (படம்), audio, video போன்றவையும் சேர்த்துக்கொள்ள முடியும். 

Bloger பொருத்தவரை உண்மையான தகவல்களாக இருக்தல் அவசியமாகும். தெளிவான பூரணமான விடயங்கள் இருக்க வேண்டும். அவ்வாறு blog post அமைந்தால், readers(வாசகர்கள்) படிப்பதற்கும், புரிந்துகொள்வதற்கு எளிமையாக காணப்படும். 

Post title பற்றிய தெளிவு

பதிவுக்கு அல்லது கட்டுரைக்குத் தொடர்பற்ற அல்லது பொருத்தமற்ற  தலைப்புகளை எழுதுவதை தவிர்பது சிறந்ததாகும். கட்டுரைக்கு அல்லது பதிவுக்கு தொடர்பான இலகுவான தலைப்புகளை(heading )எழுதல் வேண்டும் என்பது அவசியமாகும். தலைப்பானது கட்டுரையின் ( பதிவின்) உள்ளடக்கத்தை  காண்பிப்பதாக இருக்தல் வேண்டும். 

உ.ம்: கணினி குறித்து எழுதுவதாக இருந்தால் கணினி குறித்த பூரணமான தகவல்கள் என தலைப்பு இடுவது பொருத்தமாக இருக்கும்.



இது bloggers சம்மந்தப்பட்ட ஆரம்ப விடயமாகும்.மற்றைய விடயங்களை அடுத்த பதிவில் நோக்கலாம்.

மேலும் உங்கள் சந்தேகங்களை comment மூலம் தெரிவிப்பதன் மூலம் நான் உங்கள் சந்தேகங்களை தீர்த்து வைப்பதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ள முடியும்.அல்லது 0766671719 என்ற இலக்கத்திற்கு what's app மூலம் தொடர்பு கொள்ள முடியும்.






Comments

Popular posts from this blog

பாடசாலை வழிகாட்டல் ஆலோசனை சேவை தொடர்பான தொகுப்பு(மட்டக்களப்பு முதலைக்குடா மத்திய மகா வித்தியாலயம்

போட்டி பரீட்சை நுண்ணறிவு வினாக்கள்